5 ரூபாய்க்கு மதிய உணவு! – ஆனால் ஒரு ட்விஸ்ட்…

சுவையான உணவுகள் குறைந்த விலையில் கிடைப்பதால் தெரு உணவுகளை அனைவரும் விரும்புகின்றனர். டெல்லி, மும்பை மற்றும் பிற நகரங்களில் உள்ள பெரும்பாலான மக்கள் தெரு உணவுகளை சாப்பிட விரும்புகிறார்கள். உணவு பதிவரின் வீடியோக்கள் ஒவ்வொரு…

சுவையான உணவுகள் குறைந்த விலையில் கிடைப்பதால் தெரு உணவுகளை அனைவரும் விரும்புகின்றனர். டெல்லி, மும்பை மற்றும் பிற நகரங்களில் உள்ள பெரும்பாலான மக்கள் தெரு உணவுகளை சாப்பிட விரும்புகிறார்கள்.

உணவு பதிவரின் வீடியோக்கள் ஒவ்வொரு நாளும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.  இந்த முறை ரூ.5 மதிப்புள்ள மதிய உணவு குறித்த வீடியோ பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

5 ரூபாய்க்கு மட்டர் பனீர், சாப் மசாலா, ரொட்டி மற்றும் ஊறுகாய் சாலட் ஆகியவற்றை யாராவது வழங்குவார்களா? பணவீக்கம் அதிகரித்துள்ள இந்த காலகட்டத்தில், 5 ரூபாய்க்கு இவ்வளவு உயர்ந்த விலை மதிப்புள்ல உணவு 5 ரூபாய்க்கு கிடைக்கும் என்பதை யாரும் நினைத்துக்கூட பார்க்க முடியாது.  இவ்வளவு ஏன் சமோசா கூட 5 ரூபாய் இல்லை. எனவே, இப்படி ஒரு உணவை ஐந்து ரூபாய்க்கு விற்பவரை சமூக வலைதளங்களில் பார்த்த பொதுமக்கள் அவரது கடைக்கு வந்து சாப்பிட முண்டியடித்தனர்.

ஆனால் வீடியோவின் முடிவில், கடைக்காரரின் மார்க்கெட்டிங்கைப் பார்த்து சாப்பாட்டவர்கள் திகைத்துப் போனார். எந்தவொரு செயலையும் செய்யும் முன் முழுப் விவரங்களையும் அறிந்து கொள்வது எவ்வளவு முக்கியம் என்பதை இது உங்களுக்குக் கற்பிக்கும்.

வைரலான வீடியோவில் காணலாம் 5 ரூபாய் மதிப்புள்ள தட்டு வழங்கப்படுவதாக வியாபாரி கூறுகிறார். இந்தத் தாலியில் சாலட், ஊறுகாய், சாப் மசாலா, மாதர் பனீர், ரொட்டி, பெருஞ்சீரகம் போன்றவற்றையும் தருகிறார். ஏன் இவ்வளவு மலிவாக உணவளிக்கிறீர்கள் என்று அந்த நபர் கேட்கிறார். இது குறித்து அந்த வியாபாரி, எனக்கு மக்களின் அன்பு மட்டுமே தேவை என கூறுகிறார்

ஆனால் இறுதியில் நீங்கள் முதலில் 5 ரூபாய் செலுத்த வேண்டும், சாப்பிட்ட பிறகு நீங்கள் 55 ரூபாய் அதிகமாக செலுத்த வேண்டும் என்று அவர் கூறுகிறார். எரிச்சலடைந்த அந்த நபர் மொத்தத்தில் இந்த தாலியின் விலை ரூ.60., முதலில் 5 ரூபாய் கொடுக்க வேண்டும், பிறகு 55 ரூபாய் கொடுக்க வேண்டும் என்று என்ன லாஜிக் என்று கேட்கிறார். இது குறித்து வியாபாரி கூறுகையில், அதிக மக்கள் எங்கள் கடைக்கு வந்து உணவு உண்ண வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்கிறேன்.https://twitter.com/desimojito/status/1736697212980154583?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1736697212980154583%7Ctwgr%5E6a492f4874e867c44d34ffafadbfd85cdfe94854%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fnavbharattimes.indiatimes.com%2Fviral%2Fomg-news%2Ffood-blogger-5-rupee-thali-video-goes-viral-internet-user-shocked-after-find-real-price-is-60-watch-viral-video%2Farticleshow%2F106116046.cms

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.