“வழிகாட்டியை இழந்துவிட்டேன்” – முன்னாள் பிரதமர் #ManmohanSingh மறைவுக்கு ராகுல் காந்தி இரங்கல்!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) திடீர் உடல்நலக் குறைவால் நேற்று (டிச.26) மாலை டெல்லி…

"Lost a guide" - Rahul Gandhi mourns death of former PM #ManmohanSingh!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) திடீர் உடல்நலக் குறைவால் நேற்று (டிச.26) மாலை டெல்லி எய்ம்ஸ் மருத்​துவ​மனை​யில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. வயது மூப்பு மற்றும் உடல்நல குறைவு காரணமாக மன்மோகன் சிங் நேற்று இரவு 9.51 மணியளவில் காலமானார்.

இதையும் படியுங்கள் : “இந்தியா தலைசிறந்த தலைவர்களில் ஒருவரை இழந்துள்ளது” – #ManmohanSingh மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்!

அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது,

“முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இந்தியாவை மகத்தான ஞானத்துடனும் நேர்மையுடனும் வழிநடத்தினார். அவரது பணிவு மற்றும் பொருளாதாரம் பற்றிய ஆழமான புரிதல் தேசத்தை ஊக்கப்படுத்தியது. மன்மோகன் சிங்கின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். நான் ஒரு ஆலோசகர் மற்றும் வழிகாட்டியை இழந்துவிட்டேன். அவரைப் போற்றிய கோடிக்கணக்கான நாம் அவரை மிகவும் பெருமையுடன் நினைவு கூர்வோம்”

இவ்வாறு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.