முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா

அனிருத் இசையில் இறங்கி குத்தும் கமல்!

 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல், விஜய் சேதுபதி,ஃபகத் பாசில் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் நடிக்கும் விக்ரம் படம் ஜூன் 3ம் தேதி உலகத்திரையரங்குகளை அலங்கரிக்கிறது. இசை ரவுடி அனிருத் இசையில் உலக நாயகனே எழுதி பாடியிருக்கும் ‘பத்தல பத்தல’ எனும் சிங்கிள் பாடல்(single song) வெளியாகி இணையத்தையே பற்றவைத்திருக்கிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு கமலின் குத்தாட்டங்களைக்கொண்டு உருவாகியிருக்கும் இந்த பாடல் கமல் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களுக்கும் சிறப்பான விருந்து வைத்துள்ளது. இந்த பாடலை கீழே இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் கேட்கலாம்

சென்னை ஸ்லாங்கோடு ஜாலியாக தொடங்கும் பாடல் ஆழ்வார்பேட்டை ஆண்டவாவில் வரும் அட்வைஸ் போல் வரிகளில் ஒரு சுத்தி சுத்தி பின்பு அப்படியே வண்டியை யூ-டர்ன் போட்டு அரசியலில் ஒரு சுத்து சுத்துகிறது.

“கஜானாலே காசில்லே..
கல்லாலையும் காசில்லே!
ஒன்றியத்தின் தப்பாலே
ஒன்னியும் இல்ல இப்பாலே!”

போன்ற வரிகள் மத்திய அரசை டார்கெட் செய்து எழுதியதைப்போல் உள்ளதாக இணையத்தில் பேசிவருகின்றனர். இதற்கிடையில் நாம் இங்கு குறிப்பிட முடியாத சில வார்த்தைகளையும் flow-வில்  சொருகியுள்ளார் கமல். பேட்டை , தர்பார் உள்ளிட்ட படங்களில் சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்காக மரண மாஸாக மியூஸ்க் போட்ட அனிருத், உலகநாயகனையும் அதே போல் தன் இசையால் எப்போது அலங்கரிப்பார் என்று கமல் ரசிகர்கள் ஏக்கத்துடன் காத்திருந்தினர். இந்நிலையில் அவர்களுக்கெல்லாம் ஒரு அன்லிமிடெட் மீல்ஸை விருந்தாக வைத்தாக வைத்துள்ளார் கமல் என்று சினிமா ஆர்வலர்கள் கூறிவருகின்றனர்.

 

Advertisement:
SHARE

Related posts

‘பட்டாசு ஆலை வெடி விபத்துகளை தடுக்க நடவடிக்கை தேவை’ – ஓபிஎஸ்

Arivazhagan CM

அதிமுக ஆட்சிக்கு மக்கள் மட்டுமல்லாமல் இயற்கையும் சாதகமாக இருக்கிறது: முதல்வர்!

Halley Karthik

மனிதனைத் தாக்கும் கருப்புப் பூஞ்சை!