மக்களவைத் தேர்தல் | சென்னையிலிருந்து நேற்று ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் பயணம்!

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு,  சென்னையிலிருந்து நேற்று ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.   நாடு முழுவதும் நாளை தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.  7 கட்டங்களாக தேர்தல் நடைபெற…

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு,  சென்னையிலிருந்து நேற்று ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.  

நாடு முழுவதும் நாளை தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.  7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முதல் கட்டமாக தமிழ்நாட்டில் நாளை (ஏப்.19) நடைபெறவுள்ளது.  வெளியூரில் தங்கி வேலை பார்த்து வருபவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று வாக்களிக்கும் வகையில்,  தமிழ்நாட்டில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

அதன்படி,  சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன்,  807 சிறப்புப் பேருந்துகள் என மொத்தமாக 2899 பேருந்துகள் நேற்று இயக்கப்பட்டன.   இப்பேருந்துகளின் வாயிலாக நேற்று ஒரே நாளில் சுமார் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.  மேலும் சென்னையிலிருந்து பயணம் செய்ய இதுவரை 46,503 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.