34.9 C
Chennai
April 28, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம்

எல்கேஜி, யுகேஜி வகுப்புகள்; தமிழ்நாடு அரசு விளக்கம்

எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை தற்காலிகமாக அங்கன்வாடி மையங்களில் கற்றல் மேம்பாடுகளை தொடரலாம் என தொடக்க கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. 

அதிமுக ஆட்சி காலத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கவும், தனியார் பள்ளிகளின் தரத்திற்கு அரசு பள்ளிகளில் கற்றல் தரத்தை மேம்படுத்தவும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதையடுத்து, 2,381 அங்கன்வாடிகளில் செயல்பட்டு வந்த எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை எடுக்க இடைநிலை ஆசிரியர்களை தொடக்கக் கல்வி இயக்குநரகம் பணியமர்த்தியிருந்தது. வரும் கல்வியாண்டில் ( 2022-23 ) அரசு தொடக்கப் பள்ளிகளில் பணியாற்ற, அங்கன்வாடிகளில் எல்கேஜி, யுகேஜிG வகுப்புகளை எடுத்து வந்த இடைநிலை ஆசிரியர்கள் மீண்டும் திரும்ப அழைக்கப்பட்டனர். இதனால் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் மூடப்படுவதாக தகவல் வெளியானது.

ஆனால் இதை தொடக்கக் கல்வி இயக்குநரகம் மறுத்துள்ளது. அரசு தொடக்கப்பள்ளிகளில் அதிகளவில் மாணவர் சேர்க்கை உள்ளதாலும், 1 முதல் 5-ம் வகுப்பு வரை கவனம் செலுத்தி கற்றல் இடைவெளியைக் குறைக்க வேண்டும் என்பதாலும், ஏற்கனவே 4,853 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாலும், கூடுதலாக 4,519 ஆசிரியர்கள் தேவை என்பதாலும் எல்கேஜி, யுகேஜி வகுப்பெடுத்த ஆசிரியர்கள் மீண்டும் தொடக்கப்பள்ளிகளில் பணியாற்ற உள்ளதாகவும், அவர்களுக்கு மழலையர் வகுப்புகளை கையாள்வதில் சிக்கல் இருந்ததால் அவர்கள் மாற்றப்பட்டதாகவும் விளக்கமளித்துள்ளது.

அரசு தொடக்கப்பள்ளிகளில் பணியாற்ற 9,000 ஆசிரியர்கள் தேவை என்பதால் LKG, UKG வகுப்புகளை எடுத்து வந்த ஆசிரியர்கள் மீண்டும் தொடக்கப் பள்ளிகளுக்கே மாற்றப்பட்டதாக தொடக்கக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

மேலும், எண்ணும் எழுத்தும் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தவும், தொடக்கப்பள்ளிகளில் மாணவர் தரத்தை உயர்த்தவுமே ஆசிரியர்கள் மாற்றப்பட்டதாகவும், அங்கன்வாடிகளில் ஏற்கனவே இருந்த குழந்தைகளுக்கு முந்தைய நடைமுறையைப் பின்பற்றி இந்த ஆண்டு முதல் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் அங்கன்வாடி உதவியாளர்கள் மூலம் தற்காலிகமாக கற்றல் செயல்பாட்டை மேற்கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக தொடக்கக் கல்வி இயக்ககம் விளக்கமளித்துள்ளது.

இதனிடையே அங்கன்வாடிகளில் கட்டமைப்பு இல்லாத நிலையில் உதவியாளர்கள் எவ்வாறு எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை நடத்துவார்கள் என்றும் கல்வியாளர்கள், அரசியல் கட்சியினர் கேள்வி எழுப்புகின்றனர்.

Video Link : https://www.youtube.com/watch?v=njzfxdtEMg4

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading