“வாழ்வது ஒரு முறை தான்”: ரசிகருக்கு அறிவுரை கூறிய துல்கர் சல்மான்!

வாழ்வது ஒரு முறை தான் என்றும், அனுபவங்களையும் மனிதர்களையும் தானே எடுத்துச் செல்கிறோம் என நடிகர் துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார். கிங் ஆப் கோதா என்ற புதிய படத்தில் துலகர் சல்மான் நடித்து வருகிறார்.…

வாழ்வது ஒரு முறை தான் என்றும், அனுபவங்களையும் மனிதர்களையும் தானே எடுத்துச் செல்கிறோம் என நடிகர் துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார்.

கிங் ஆப் கோதா என்ற புதிய படத்தில் துலகர் சல்மான் நடித்து வருகிறார்.
அபிலாஷ் ஜோஷி இயக்கும் இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் வேஃபேரர் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கின்றன. ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரஹ்மான் இணைந்து இசையமைக்கின்றனர்.

இது பான் இந்தியப் படமாக மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடா, ஹிந்தி என 5 மொழிகளில் வெளியாகிறது. இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் முதல் பாடல் நாளை (ஜூலை 28) வெளியாகிறது.
இந்நிலையில் துல்கர் சல்மான் வீடியோ பாடலில் நடித்தது தொடர்பாக ட்விட்டர் சப்ஸ்கிரைபர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் தென்னிந்திய படங்களில் அதிகமாக நடிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். இதற்கு பதில் அளித்த துல்கர் சல்மான், “நீங்களும் உங்களுக்குப் பிடித்த வேலையைப் பிடித்தது போல் பண்ணுங்கள். அனுபவம்தானே வாழ்க்கை. அதில் சிறிது, பெரிது என எதுவுமில்லை. இந்த இசை வீடியோவின் அனுபவத்தையும் என்னுடன் பணிபுரிந்தவர்களையும் வாழ்நாள் முழுவதும் பாராட்டுவேன். வாழ்வது ஒருமுறை. அனுபவங்களையும் மனிதர்களையும்தானே நாம் எடுத்துச் செல்கிறோம்” என தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.