மட்ட… மட்ட.. ராஜ மட்ட.. – ‘The G.O.A.T.’ படத்தின் 4வது சிங்கிள் குறித்து ஹிண்ட் கொடுத்த #LyricistVivek

‘The G.O.A.T.’ படத்தின் 4வது சிங்கிள் குறித்து X தளத்தில் பாடலாசிரியர் விவேக் ஹிண்ட் கொடுத்துள்ளார். லியோ படத்தைத் தொடர்ந்து விஜயின் 68-வது படமான ‘கிரேட்டஸ்ட்  ஆஃப் ஆல் டைம்ஸ் படத்தை (GOAT –…

‘The G.O.A.T.’ படத்தின் 4வது சிங்கிள் குறித்து X தளத்தில் பாடலாசிரியர் விவேக் ஹிண்ட் கொடுத்துள்ளார்.

லியோ படத்தைத் தொடர்ந்து விஜயின் 68-வது படமான ‘கிரேட்டஸ்ட்  ஆஃப் ஆல் டைம்ஸ் படத்தை (GOAT – Greatest Of All Times) வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரசாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் வரும் செப்டம்பர் 5-ம் தேதி விநாயகர் சதுர்த்தியன்று வெளியாக உள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு உள்ளனர்.

மேலும் இது விஜய் அரசியல் கட்சித் தொடங்கிய பிறகு வெளியாகும் முதல் படமாகும். ஏற்கனவே இப்படத்திலிருந்து 3 பாடல்கள் வெளியான நிலையில் இப்படத்தின் டிரெய்லருக்காக ரசிகர்கள் ஆவலாக காத்து கொண்டு இருந்தனர். தொடர்ந்து, தி கோட் திரைப்படத்தின் ட்ரெய்லர் கடந்த 17 ம் தேதி வெளியானது. தொடர்ந்து, இந்த ட்ரெயிலர் இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருந்தது. மேலும், ட்ரெய்லரை விஜய்யின் ரசிகர்கள் கொண்டாடி வந்தனர்.

படத்தின் 3 பாடல்கள் இதற்கு முன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் நாளை படத்தின் 4வது பாடலான “மட்ட” நாளை மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இப்பாடல் ஒரு ஸ்பெஷல் சாங் எனவும் இப்பாடல் மிகவும் எனெர்ஜடிகாக இருக்கும் எனவும், திரிஷா இப்பாடலில் இடம் பெற்றுள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து, அச்சனா கல்பாதி தனது எக்ஸ் பக்கத்தில், பல்வேறு காரணங்களுக்காக இது எனக்கும் மிகவும் பிடித்த பாடல்” என்றும் மட்ட பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். இதேபோல பாடலாசிரியர் விவேக்,” மச்சி கெடா மஞ்ச சட்ட மம்டி வரான் பள்ளம் வெட்ட மட்ட மட்ட ராஜ மட்ட எங்க வந்து யாரு கிட்ட.., இது இளையதளபதியின் ப்ளாஸ்ட்.. ஆட்டநாயகன் நடனத்திற்காக காத்திருங்கள்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

https://x.com/Lyricist_Vivek/status/1829505059559731222

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.