ஆரம்பிக்கலாமா…. இந்தியா கூட்டணி பிரசாரம் குறித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ!

இந்தியா கூட்டணிக்காக பிரசாரம் செய்ய உள்ளது குறித்த வீடியோ ஒன்றை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதை தற்போது பார்க்கலாம்… அந்த வீடியோவில், ‘ஆரம்பிக்கலாமா வணக்கம்… கடந்த சில மாதமாக உங்களில் ஒருவன் என்ற தலைப்பில்…

இந்தியா கூட்டணிக்காக பிரசாரம் செய்ய உள்ளது குறித்த வீடியோ ஒன்றை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதை தற்போது பார்க்கலாம்…

அந்த வீடியோவில், ‘ஆரம்பிக்கலாமா வணக்கம்… கடந்த சில மாதமாக உங்களில் ஒருவன் என்ற தலைப்பில் கேள்வி பதில் வடிவத்தில் பல விஷயங்களை உங்களிடம் பகிர்ந்து கொண்டேன். திமுக 75வது ஆண்டு நெருங்கிக் கொண்டிருக்கும் பழம்பெரும் கட்சி. இந்திய நாடாளுமன்றத்தின் மூன்றாவது பெரிய கட்சி.

அண்ணா, கலைஞர் என்று இந்திய நிலப்பரப்பில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய தலைவர்களால் உருவாக்கப்பட்ட உடன் பிறப்புகள் நாங்கள். இப்பொழுது இந்தியாவுக்காக பேச வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் இருக்கிறோம். 2024-ல் முடியப் போற பாஜக ஆட்சி இந்தியாவை எப்படி எல்லாம் உருக்குலைத்திருக்கிறது; எதிர்காலத்தில் நாம் கட்டமைக்க விரும்புகின்ற சமத்துவ சகோதரத்துவ இந்தியா எப்படி இருக்கும் என்று ஒரு ஆடியோ சீரீஸில் பேசப் போகிறேன். அதற்கு ‘ஸ்பீக்கிங் ஃபார் இந்தியா’ என்ற தலைப்பு வச்சுக்கலாமா? தெற்கிலிருந்து வரும் இந்தக் குரலுக்காகக் காத்திருங்கள்’ என அந்த வீடியோ முடிகிறது.

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.