மலேசியாவில் “லியோ” இசை வெளியீட்டு விழா -லேட்டஸ்ட் அப்டேட்!

லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவை மலேசியாவில் வைத்து நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடித்து வரும் படம் ‘லியோ’. கவுதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன்,…

லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவை மலேசியாவில் வைத்து நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடித்து வரும் படம் ‘லியோ’. கவுதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் உட்பட பலர் இதில் நடிக்கின்றனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசை அமைக்கிறார். செவன் ஸ்கிரீன் நிறுவனம் படத்தைத் தயாரிக்கிறது. இப்படம் வரும் அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

லியோ திரைப்படம் வெளிவர இன்னும் இரண்டு மாதங்கள் உள்ள நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தெரிகிறது. தற்போது, ​​சமீபத்திய தகவல் என்னவென்றால், இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை மலேசியாவில் வைத்து நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, விஜய்யின் ‘லியோ’ படத்தில் வில்லனாக நடித்துள்ள சஞ்சய் தத்தின் லுக்கை வெளிப்படுத்தும் கிளிம்ப்ஸ் வீடியோவை அவரது பிறந்தநாளை முன்னிட்டு சில தினங்களுக்கு முன்பு படக்குழு வெளியிட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.