லியோ படத்தின் 25வது நாள்!… இத்தனை கோடி வசூலா?…

லியோ திரைப்படத்தின் 25-வது நாள் சாதனை போஸ்டரை வெளியிட்டுள்ளது தயாரிப்பு நிறுவனம். நடிகர் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படத்தின் 25-வது நாள் சாதனை போஸ்டரை வெளியிட்டது செவன் ஸ்கிரீன்ஸ் ஸ்டுடியோ நிறுவனம். இயக்குநர்…

லியோ திரைப்படத்தின் 25-வது நாள் சாதனை போஸ்டரை வெளியிட்டுள்ளது தயாரிப்பு நிறுவனம்.

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படத்தின் 25-வது நாள் சாதனை போஸ்டரை வெளியிட்டது செவன் ஸ்கிரீன்ஸ் ஸ்டுடியோ நிறுவனம். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்து அக்டோபர் 19-ஆம் தேதி வெளியான திரைப்படம் லியோ.

இந்தப் படத்தில் அர்ஜூன், சஞ்சய் தத், திரிஷா, கௌதம் வாசுதேவ், மிஷ்கின், பிரியா ஆனந்த், மடோனா செபாஸ்டியன் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்திருந்தனர். செவன் ஸ்கிரீன்ஸ் ஸ்டுடியோ தயாரிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளிவந்த இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூல்ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

படம் வெளியான முதல்நாளிலேயே ரூ.148 கோடி வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து உலக அளவில் ரூ.540 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது லியோ திரைப்படத்தின் 25-வது நாள் சாதனை போஸ்டரை வெளியிட்டுள்ளது தயாரிப்பு நிறுவனம்.

https://twitter.com/7screenstudio/status/1723715880368968013

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.