சம்பா மாவட்டத்தின் ராம்கர் சப் செக்டார் பகுதியில் இந்திய-பாகிஸ்தான் எல்லையைத் தாண்டி இந்திய எல்லைக்குள் சிறுத்தை ஒன்று நுழைந்தது.
எல்லைப் பாதுகாப்புப் படையினர் (பிஎஸ்எஃப்) உள்ளூர் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் நுழைந்த சிறுத்தை கேமராவில் சிக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றது. இச்சம்பவத்தை அடுத்து மக்கள் விழிப்புடன் இருக்குமாறு நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
வீடியோ வெளியான சில மணி நேரதிதிலேயே ட்விட்டரில் நகைச்சுவையான எதிர்வினைகளால் கமெண்ட் பகுதி நிரப்பப்பட்டது. பல பயனர்கள் “இந்த வகையான எல்லை ஊடுருவலை” வரவேற்க்கத்தக்கது என பலர் தெரிவித்துள்ளனர்.
https://twitter.com/AdhikariBN/status/1637391620386574336?s=20
நேற்று இரவு 7 மணியளவில் சம்பாவின் ராம்கர் துணைப் பகுதியில் பாகிஸ்தான் பகுதியில் இருந்து சர்வதேச எல்லையைக் கடந்து இந்திய எல்லைக்குள் சிறுத்தை நுழைவதை அடுத்து எல்லையில் வசிக்கும் உள்ளூர் மக்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.







