லியோ படத்தின் புதிய அப்டேட்; ரசிகர்கள் உற்சாகம்

லியோ படத்தின் ஷூட்டிக்  சென்னையில் பிரசாத் ஸ்டூடியோவிலும் படபிடிப்பு நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விக்ரம்-2 படத்தை தொடர்ந்து தற்போது லியோ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகர் விஜய்,…

லியோ படத்தின் ஷூட்டிக்  சென்னையில் பிரசாத் ஸ்டூடியோவிலும் படபிடிப்பு நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விக்ரம்-2 படத்தை தொடர்ந்து தற்போது லியோ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகர் விஜய், த்ரிஷா, சஞ்ஜய் தத், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் மூலம் நடிகர் விஜய்யுடன் லோகேஷ் 2வது முறையாக கூட்டணி சேர்ந்துள்ளார்.

இந்த படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடந்து வருகின்றது. படப்பிடிப்பு தளத்தில் இருந்து அவ்வப்போது வெளியாகும் புகைப்படங்களால் ரசிகர்கள் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் காத்துள்ளனர். மேலும் லியோ படத்தின் ப்ர்ஸ்ட் ப்ரொமோ வீடியோ  ப்ளடி ஸ்வீட் என்று பெயர் அறிவிக்கப்பட்ட உடனேயே இந்தப் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்தது.

அதனை அதிகப்படுத்தும் விதமாக லியோ படத்தின் ப்ரோமோ வெளியாகியும் பட்டையை கிளப்பியது. ப்ரோமோவில் விஜய் ஒரு சாக்லேட் ஃபேக்டரி வைத்திருப்பது போலவும், அவரைத் தேடி மிகப்பெரிய கேங் ஒன்று வருவது போலவும் காட்சிகள் இருந்தன.

மேலும், லியோ ப்ரொமோ வீடியோ தற்போது 5 கோடி பார்வையாளர்களைக் கடந்துள்ளது. இதனால் விஜை ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். மேலும் படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்தின் ஷூட்டிக் சென்னையில் நடக்கவுள்ளதாகவும், இந்த படப்பிடிப்பைச் சென்னையில் இருக்கும் பிரசாத் ஸ்டூடியோவிலும், விஜய்யின் வீட்டிலும் ஷூட்டிங்கை நடத்தவும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் படம் விரைவில் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இந்த படப்பிடிப்பில் விஜயுடன், சஞ்ஜய் தத், மன்சூர் அலிகான் ஆகியோர் பங்கேற்பார்கள் எனவும் கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.