ஆந்திர சட்டப்பேரவை தேர்தல்  –  நகரி தொகுதியில் நடிகை ரோஜா பின்னடைவு!

ஆந்திர மாநிலத்தின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் நகரி தொகுதியில் போட்டியிட்ட நடிகை ரோஜா பின்னடைவை சந்தித்துள்ளார்.   நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (ஜூன் 4)…

ஆந்திர மாநிலத்தின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் நகரி தொகுதியில் போட்டியிட்ட நடிகை ரோஜா பின்னடைவை சந்தித்துள்ளார்.  

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (ஜூன் 4) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.  இத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.   முதலில் தபால் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டு அடுத்தடுத்த சுற்றுகளும் எண்ணப்படுகின்றன.

தபால் வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி பரவலாக பாஜக முன்னணி வகிக்கிறது.  543 மக்களவை தொகுதிகளில் குஜராத் மாநிலம் சூரத் தொகுதி பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வான நிலையில் எஞ்சிய 542 இடங்களுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.  அதன்படி,  பாஜக கூட்டணி 294 இடங்களில் முன்னிலை வகிக்கும் நிலையில் இந்தியா கூட்டணி கட்சிகள் 232 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.  பின்னர் மற்ற கட்சிகள் 17 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

இதனுடன்,  ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற சட்டபேரவை தேர்தலின் வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன.  இந்த தேர்தல் முடிவுகளில்  சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சி 130 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.  அதனுடன் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.  மேலும் ராஜமுந்திரி,  உண்டி ஆகிய பேரவைத் தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சியின் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

தெலுங்கு தேசம் கட்சிக்கு அடுத்தபடியாக பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி 20 இடங்களிலும்,  ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 16 இடங்களிலும்,  பாஜக 7 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது.  இந்த நிலையில்,  ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் நகரி தொகுதியில் போட்டியிட்ட நடிகை ரோஜா 39,425 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.