சிறுநீரக நோயால் அவதிப்பட்டு வந்த பழம்பெரும் இயக்குநர் ஷியாம் பெனகல் இன்று காலமானார்.
இந்தியத் திரையுலகில் மிகப் பெரிய தொலைநோக்கு பார்வை கொண்ட புகழ்பெற்ற இயக்குநர் ஷியாம் பெனகல் இன்று (90) காலமானார். தீராத சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர் இன்று மாலை 6.30 மணியளவில் மும்பையில் உள்ள வோக்கார்ட் மருத்துவமனையில் காலமானார். கடந்த 14ஆம் தேதிதான் இவர் தனது 90வது பிறந்தநாளை குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்களுடன் கொண்டாடினார்.
இந்திய சினிமாவின் உயரிய விருதான தாதாசாகெப் பால்கே விருது, 18 தேசிய திரைப்பட விருதுகள் என பல விருதுகளைப் பெற்றுள்ளார்.







