பழம்பெரும் நடிகை பி.சரோஜா தேவி (87) உடல் நலக்குறைவால் காலமானார். கன்னடத்து பைங்கிளி, அபிநய சரஸ்வதி என ரசிகர்களால் அழைக்கப்பட்ட சரோஜா தேவி தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட 200க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். இவர் இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்மபூஷன், பத்மஸ்ரீ விருதுகளை பெற்றுள்ளார்.
இந்த நிலையில் நடிகை பி.சரோஜா தேவி (87) உடல் நலக்குறைவால் பெங்களுருவில் காலமானார். இவருக்கு பெங்களூர் கொடிகேஹள்ளி தோட்டத்தில் பாரம்பரிய முறையில் இறுதிச் சடங்கு நடைபெறவுள்ளது. இவரது மறைவிற்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.







