பழம்பெரும் நடிகர் சங்கரன் மறைவு | திரைத்துறையினர், ரசிகர்கள் இரங்கல்…

நடிகரும் இயக்குநருமான ரா. சங்கரன் காலமானார். அவருக்கு வயது 95. மெளன ராகம் திரைப்படத்தில் நடிகை ரேவதிக்கு தந்தையாக மிஸ்டர் சந்திரமௌலி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான ரா.சங்கரன் (95) வயது மூப்பால் சென்னையில்…

நடிகரும் இயக்குநருமான ரா. சங்கரன் காலமானார். அவருக்கு வயது 95.

மெளன ராகம் திரைப்படத்தில் நடிகை ரேவதிக்கு தந்தையாக மிஸ்டர் சந்திரமௌலி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான ரா.சங்கரன் (95) வயது மூப்பால் சென்னையில் உள்ள இல்லத்தில் காலமானார்.

அந்த படத்தில் நடிகர் கார்த்திக் இவரை  “மிஸ்டர் சந்திரமௌலி” என்று அழைப்பது அனைவரிடத்திலும் இன்றுவரை நீங்காது நினைவிலிருக்கிறது.  வேலும் மயிலும், தேன் சிந்துதே வானம் என 8 திரைப்படங்களையும் அவர் இயக்கியுள்ளார்.

இதுதொடர்பாக, “எனது ஆசிரியர் இயக்குநர் ரா.சங்கரன் சார் அவர்களின் மறைவு வேதனை அளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என இயக்குநர் பாரதிராஜா பதிவிட்டுள்ளார்.

ரா. சங்கரன் மறைவுக்கு திரைத்துறையினர், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.