லெஜெண்ட் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சரவணா ஸ்டாேர்ஸ் உரிமையாளர் சரவணன் நடிக்கும் புதிய திரைப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரவணன் நடிக்கும் புதிய படம் சமூக அக்கறையோடு கூடிய பிரமாண்ட படமாகவும் பான் இந்தியா அளவிலும் தயாரிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மாத இறுதியில் வெளியான லெஜெண்ட் திரைப்படம் சர்வதேச அளவில் வெளியாகி வெற்றி பெற்றது. ஜேடி – ஜெர்ரி இயக்கத்தில் வெளியான லெஜண்ட் திரைப்படத்திற்கு கலவையான விமர்சனம் கிடைத்தது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழிகளில் வெளியான லெஜண்ட் திரைப்படத்திற்கு அந்தந்த மாநிலங்களில் நல்ல வரவேற்பு இருந்ததால், சரவணன் நடிக்கும் அடுத்த படமும் பான் இந்திய அளவில் தயாரிக்கப்படுவதாக சரவணா தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தி லெஜண்ட் படத்திலிருந்து வெளிவந்த மொசலோ மொசலு பாடல் மற்றும் வாடி வாசல் வீடியோ பாடல் நல்ல வரவேற்பைப் பெற்றது. மொசலோ மொசலு பாடல் 14 மில்லியன் மற்றும் வாடிவாசல் பாடல் 18 மில்லியன் பார்வைகளையும் கடந்துள்ள நிலையில், முதல் படம் வெளிவருவதற்கு முன்பே தான் ஒரு லெஜண்ட் எனத் தடம் பதித்திருந்தார் லெஜண்ட் சரவணன்.
தென்னிந்தியத் திரை உலகில் முன்னணி நட்சத்திர நாயகிகள் பலரும் கலந்து கொண்ட தி லெஜண்ட் படத்தின் பிரமாண்டமான இசை வெளியீட்டு விழா அண்மையில், சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.








