முக்கியச் செய்திகள் உலகம்

பத்திரிகை சுதந்திரத்துக்கு அச்சுறுத்தலாக இருக்கும் உலக தலைவர்கள்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உள்ளிட்ட தலைவர்கள், ஊடகத்துறையினருக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரான்ஸ் தலைநர் பாரிசைத் தலைமை இடமாகக் கொண்டு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு மற்றும் ஊடகச் சுதந்திரத்தை வலியுறுத்தும் எல்லைகளற்ற செய்தியாளர்கள் என்ற சர்வதேச நிறுவனம் இயங்கி வருகிறது.

இந்தாண்டின் பத்திரிகை கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராகச் செயல்படுவது, பத்திரிகையாளர்கள் கைது உள்ளிட்ட வன்முறைகளில் ஈடுபடும் உலக தலைவர்கள் 37 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், ஹங்கேரி பிரதமர் விக்டர் ஆர்பன் இவர்கள் ஊடகத்துறையினருக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வங்காள தேச பிரதமர் ஷேக் அசினா, ஹாங் காங் தலைமை நிர்வாகி கேரி லேம் உள்ளிட்ட பெண் தலைவர்களும் இடம் பெற்றிருப்பது உலகளவில் பேசும் பொருளாக மாறியுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

டியூஷனுக்கு சென்ற மாணவி கூட்டுப் பாலியில் வன்கொடுமையால் உயிரிழப்பு!

Gayathri Venkatesan

தந்தையிடமிருந்து பணத்தை திருடிய 13 வயது சிறுவன்!

Jeba Arul Robinson

ரஜினியின் ’அண்ணாத்த’ படத்தில் இணைந்த விஜய்-யின் வில்லன்

Gayathri Venkatesan