லோகேஷ் கனகராஜுடன் இணைந்த லாரன்ஸ்.. வெளியானது படத்தின் டைட்டில்..!

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘பென்ஸ் ‘ படத்தின் அறிவிப்பு வெளியானது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் ஒரு படத்தை இயக்க இருக்கிறார் என்பதும் சன் பிக்சர்ஸ் நிறுவனம்…

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘பென்ஸ் ‘ படத்தின் அறிவிப்பு வெளியானது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் ஒரு படத்தை இயக்க இருக்கிறார் என்பதும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க இருக்கும் இந்த படத்தின் டைட்டில் இம்மாதம் 22ஆம் தேதி வெளியாக இருக்கிறது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் படம் குறித்த அறிவிப்பு சற்றுமுன் வெளியாகி உள்ள நிலையில் அந்த படத்திற்கு ’பென்ஸ்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை ’ரெமோ’ மற்றும் ’சுல்தான்’ படங்களை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் இயக்க இருப்பதாகவும் இந்த படத்தில் தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்களில் ஒருவரான ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த படத்திற்கு ’பென்ஸ்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக அபாரமான போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ள நிலையில் இந்த போஸ்டர் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’தலைவர் 171’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் அவர் தயாரிக்கும் படத்தின் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/offl_Lawrence/status/1779384885683339337?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1779384885683339337%7Ctwgr%5E0292f2b839ea440a27ae747435b728363df2481e%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.indiaglitz.com%2Fbefore-thalaivar-171-lokesh-another-movie-first-look-poster-ragawa-lawrence–tamilfont-news-353423

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.