விக்ரம் லேண்டர் & பிரக்யான் ரோவரில் இருந்து எந்த சிக்னலும் பெற முடியவில்லை! -இஸ்ரோ…!

நிலவில் இருக்கும் விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவருடன் தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை என்று இஸ்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 23-ம் தேதி சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவில் இறங்கி 14 நாட்கள் ஆராய்ச்சி செய்தது. தொடர்ந்து…

நிலவில் இருக்கும் விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவருடன் தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை என்று இஸ்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆகஸ்ட் 23-ம் தேதி சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவில் இறங்கி 14 நாட்கள் ஆராய்ச்சி செய்தது. தொடர்ந்து நிலவில் இருள் சூழும் காலத்தில் பிரக்யான் ரோவர் 14 நாட்கள் உறக்க நிலையில் வைக்கப்பட்டது.

தற்போது நிலவின் தென் துருவத்தில் சூரிய ஒளி விழத் தொடங்கியதையடுத்து உறக்க நிலையில் வைக்கப்பட்டுள்ள சந்திரயான்-3 விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் ஆகியவற்றை, மீண்டும் விழித்தெழ வைப்பதற்கான பணிகள் நடைப்பெற்றன.

ஆனால், அதனை தொடர்புகொள்ள முடியவில்லை என இஸ்ரோ அறிவித்துள்ளது. மேலும், ரோவருடன் தொடர்பை ஏற்படுத்தும் முயற்சி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

https://twitter.com/isro/status/1705209835783078092?s=20

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.