ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 5 ஆம் தேதி தொடங்கி, நவம்பர் 19 ஆம் தெதி வரை இந்தியாவில் தொடங்கி நடைபெறவுள்ளது. உலகக் கோப்பை கிரிக்கெ தொடரில் பங்கேற்று விளையாடும் நாடுகள் தங்களின் 15 பேர் கொண்ட அணியினரை இம்மதம் 28 ஆம் தேதிக்குள் ஐசிசியிடம் ஒப்படைக்க வேண்டும். இந்த நிலையில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடும் அணிகள் ஒவ்வொருவராக தங்களின் 15 பேர் கொண்ட அணியினரை அறிவித்து வருகின்றன. இந்தியாவை பொறுத்தவரை இம்மாதம் 5 ஆம் தேதி, உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டிருந்தது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி (செப்டம்பர் 5 அறிவிக்கப்பட்டது): ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஷ் ஐயர், இஷான் கிஷன், கே எல் ராகுல், ஹர்திக் பாண்டியா (து. கேப்டன்), சூர்ய குமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் படேல், ஷார்துள் தாகுர், ஜாஸ்பிரித் பும்ரா, முகமது சமி, முகமது சிரஜ். குல்தீப் யாதவ்.
இந்திய அணி அறிவிக்கப்பட்டது முதலே டெஸ்ட் கிரிக்கெட்டில் உலகின் நம்பர் ஒன் வீரராக இருக்கும் ரவிசந்திரன் அஸ்வின் ஏன் அணியில் புறக்கணிக்கப்பட்டார் எனவும், இடது கை பேட்டர் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் திலக் வர்மாவுக்கு ஏன் வாய்ப்பு வழங்கப்படவில்லை என பல்வேறு கேள்விகளும், விமர்சனங்களும் எழுந்தன. குறிப்பக மற்ற நாடுகளின் உலகக் கோப்பை கிரிக்கெட் அணிகளில் இரண்டும் முதல் நான்கு வரையிலான இடது கை பேட்டர்கள் இருக்கின்ற சூழலில், அவர்களுக்கு எதிராக அஸ்வினின் ஆஃப் ஸ்பின் பந்துவீச்சு நிச்சயம் இந்திய அணிக்கு நல்ல திருப்பத்தை தரும் என கருத்துக்கள் முன் வைக்கப்பட்டது.
இருப்பினும் வரும் 28 ஆம் தேதி வரை அனைத்து நாடுகளும் உலகக் கோப்பை தொடருக்கான தங்கள் அணிகளை முடிவு செய்திட வேண்டும் என்பதால் கூடுதல் நேரம் இருப்பதை கருத்தில் கொண்ட இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம், இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் தொடரை உற்று நோக்கி காத்துக்கொண்டிருக்கிறது. உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இருக்கின்ற சிக்கல்களை சீரமைக்கும் முயற்சியை எதிர்நோக்கி இந்திய அணி இந்த தொடரில் விளையாடி வருகிறது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அணியை முடிவு செய்ய இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் அணியில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள வீரர்களில் யாருக்கான வாய்ப்பு தவிர்க்கப்படும் என உத்தேசமாக பார்க்கையில், முதலில் வரும் வீரர் அக்ஷர் படேல் தான். ஆம் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் அவர் இலங்கைக்கு எதிரான இறுதிப் போட்டியில் இருந்து வெளியேறினார். அவருக்கு பதிலாக தான் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக அக்சர் படேல் குணமாகவில்லை என்றால் அந்த வாய்ப்பு நிட்சயம் அவரை போன்ற ஒரு ஆல் ரவுண்டருக்கு தான் வழங்கப்படவேண்டும். இதில் தான் சிக்கல் எழுந்துள்ளது. அதாவது அந்த இடத்திற்கான பொறுத்தமாக திலக் வர்மா, ஆர் அஸ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தர் என ஒவ்வொருவரும் இருக்கின்றனர். ஆனால் இப்போது நடைபெற்றுவரும் ஆஸ்திரேலியாவுக்கு எத்ரான ஒருநாள் தொடரில் சிறப்பான பங்களிப்பை அஸ்வின் வழங்க நேர்ந்தால், அக்சர் படேலுக்கு பதில் ரவி அஸ்வின் தான் இந்திய அணியில் இடம்பெறக் கூடும்.
ரவிச்சந்திரன் அஸ்வினின் 15 ஆண்டுகால அனுபவம் நிட்சயம் இந்திய அணிக்கு பலனளிக்கும் என இந்தியா மட்டுமின்றி, வெளி நாட்டு கிரிக்கெட் விமர்சகர்கள் மத்தியிலும் பெறும் கருத்தாக இடம்பெற்று வருகிறது. அதே சமையம், இந்திய அணிக்கு தனது பங்களிப்பு தேவை படும் பட்சத்தில் அடுத்த நொடியே நான் விளையாடி எனது 100 சதவிகிதத்தை கொடுக்க எப்போதும் தயாராக இருக்கிறேன் என அஸ்வின் பேசியிருப்பதும், நான் அஸ்வினுடன் தொலைபேசியில் அவ்வப்போது உரையாடிக் கொண்டிருக்கிறேன், அவர் இன்னும் எங்களது திட்டத்தில் இருக்கிறார் என இந்திய கேப்டன் ரோகித் சர்மா பேசியிருப்பதும், இந்திய கிரிக்கெட் அணியில் அஸ்வினின் இடத்தை கிட்டத்தட்ட உறுதி செய்திருக்கிறது.
அவ்வாறு நடக்குமெனில், வரும் 28 ஆம் தேதி இறுதியாக அறிவிக்கப்படும் இந்திய அணியில் அஸ்வின் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமையம் இந்திய கிரிக்கெட் அணியில் பின்புலமாக செயல்படுபவர் சூர்யகுமார் யாதவ், இக்கட்டான சூழலில் அணிக்கான திட்டத்தை செயல்படுத்த அவர் தேவை என்று பேசியிருக்கும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளார் ராகுல் திராவிட், நாங்கள் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்துள்ளோம், அதில் நிட்சயம் சூர்ய குமார் யாதவ் இருப்பார் என பேசியிருப்பதும் சூர்யகுமார் யாதவ் மீதான நம்பிக்கையை முற்றிலுமாக வெளிப்படுத்தியிருப்பதாக பார்க்கப்படுகிறது.









