முக்கியச் செய்திகள் தமிழகம்

“நீட் கூடாது என்பதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியாக உள்ளார்” அமைச்சர் பேட்டி!

“நீட் தேர்வு கூடாது என்பதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியாக உள்ளார்” என தலைமைச்செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி!

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ள நிலையில் நாடு முழுவதும் தினசரி கொரோனா பாதிப்பில் தமிழகம் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டும், தற்போது 18 வயது மேற்பட்டோருக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்கிற விதிமுறை உள்ள காரணத்தினாலும் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டும் தமிழ்நாட்டில் +2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுகிறது என்று முதலமைச்சர் அறிவித்திருந்தார்.

தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் மதிப்பெண்கள் எப்படி வெளியிடுவது என்பது தொடர்பாக முடிவு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் ஆன்லைன் வகுப்பிற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பாக இன்று முதலமைச்சருடன் ஆலோசித்து நெறிமுறைகள் வெளியிடப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

மதிப்பெண்கள் எப்படி வெளியிடுவது என்பது தொடர்பாக முடிவு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தனியார் பள்ளிகளுக்கான கட்டணம் தொடர்பாகவும் முதல்வருடன் ஆலோசிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு தமிழகத்திற்கு வர கூடாது என்று உறுதியுடன் உள்ளோம் அமைச்சர் மகேஸ் தெரிவித்துள்ளார்!

Advertisement:

Related posts

15 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்: முதல்வர் பழனிசாமி

Ezhilarasan

’20 தொகுதி எதிர்பார்த்தோம், ஐந்துதான் கிடைத்தது’: ஜி.கே.மணி!

Karthick

திமுகவின் வாரிசு அரசியலுக்கு முடிவு கட்டும் தேர்தலாக இந்த தேர்தல் அமைய வேண்டும்! – எடப்பாடி பழனிசாமி

Nandhakumar