நாடாளுமன்ற தேர்தலில் டிடிவி தினகரன் தலைமையிலான அமமுகவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த
காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, பின்னர் செய்தியாளர்களை
சந்தித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பாஜக அரசை கண்டித்து ராகுல்காந்தி தலைமையில் கன்னியாகுமரிலிருந்து காஷ்மீர் வரை அடுத்த மாதம் 7 ஆம் தேதி முதல் காங்கிரஸ் கட்சியினர் நடைபயணம் மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்தார். சாதி, மாதம், மொழி என பல வகையிலும் மக்களை
பிளவுபடுத்தும் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை அப்புறப்படுத்த வேண்டும் என்பதற்காக
ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்ள உள்ளதாகவும், இதில் அவருடன் 5 ஆயிரம் தொண்டர்கள் பங்கேற்க உள்ளதாகவும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.
பொருளாதாரக் கொள்கை குறித்த புரிதல் இல்லாததால் அரிசி, கோதுமைக்கு ஜிஎஸ்டி வரியை மத்திய பாஜக அரசு விதிப்பதாகவும் இதனை காங்கிரஸ் வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் விமர்சித்தார்.
தமிழகத்தில் ஆளுநர் ரவி போட்டி அரசாங்கம் நடத்தி வருவதாகக் கூறிய கே.எஸ்.அழகிரி, கூட்டாட்சி முறையில் செயல்படும் அரசாங்கத்தில் தமிழக ஆளுநர் ரவி தனியாக கருத்தரங்கம் நடத்தி தனது எல்லையை மீறக்கூடாது என வலியுறுத்தினார்.
காங்கிரஸ் கட்சியின் அடுத்த அகில இந்திய தலைவர் யார் என்பதை ஒரு விவாதப்பொருள் ஆக்க வேண்டாம் என கே.எஸ்.அழகிரி கேட்டுக்கொண்டார். காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவராக கார்த்திக் சிதம்பரம் வந்தால் அதனை வரவேற்போம் என்றும் அவர் கூறினார்.
பாஜக தமிழகத்தில் காலூன்றுவதும் வளருவதும் அறிவியல் பூர்வமாக
நடக்காது எனக் கூறிய கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் கட்சிக்கு சேருகிற கூட்டம் வருகிறது. பாஜகவிற்கு சேர்க்கப்படும் கூட்டம் வருகிறது என்றார். நாடாளுமன்ற தேர்தலில் டிடிவி தினகரன் தலைமையிலான அமமுகவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.