முக்கியச் செய்திகள் விளையாட்டு

பாராலிம்பிக்; இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப்பதக்கம்

பாராலிம்பிக் பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் கிருஷ்ணா நாகர் ஹாங்காங் வீரரை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தட்டி சென்றார். 

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாராலிம்பிக் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெற்ற பாராலிம்பிக் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில், இந்திய வீரர் சுஹாஸ் யாதிராஜ், பிரான்ஸ் வீரர் லூகாஸ் மாசூரை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 21க்கு 15, 17க்கு 21, 15க்கு 21 என்ற செட் கணக்கில் இந்திய வீரர் சுஹாஸ் யாதிராஜ் தோல்வியடைந்தார். இதனால் அவருக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.

இதேபோன்று, மற்றொரு பிரிவுக்கான பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் ஹாங்காங் வீரர் கை மன் சூவை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில், கை மன் சூவை விழ்த்தி கிருஷ்ணா நாகர் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். பாராலிம்பிக்கில் இந்தியா இதுவரை 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 19 பதக்கங்களை குவித்துள்ளது.

Advertisement:
SHARE

Related posts

தலைமைச் செயலகம் அருகே அரசு ஊழியர் சங்கத்தினர் திடீர் போராட்டம்!

Ezhilarasan

சென்னை விமான நிலையத்தில் 3கி தங்கம் பறிமுதல்

Halley karthi

’கொரோனா மாதா’திடீர் அகற்றம்: போலீசார் அதிரடி நடவடிக்கை!

Gayathri Venkatesan