கோலிவுட் “கேம் ஆஃப் த்ரோன்ஸ்”… நடிகர் சிம்பு வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரல்…

சிம்பு கேம் ஆஃப் த்ரோன்ஸ் போன்ற ஒரு சின்ன க்ளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளார். பத்துதல படத்திற்கு பின் நடிகர் சிலம்பரசன் அடுத்ததாக கமல்ஹாசன் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார். இந்த…

சிம்பு கேம் ஆஃப் த்ரோன்ஸ் போன்ற ஒரு சின்ன க்ளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளார்.

பத்துதல படத்திற்கு பின் நடிகர் சிலம்பரசன் அடுத்ததாக கமல்ஹாசன் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ளார். ரஜினிகாந்திற்காக எழுதப்பட்ட கதையில் சிம்பு நடிக்கவுள்ளது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படத்திற்காக சிலம்பரசன் துபாய், மலேசியாவில் தீவிர பயிற்சி மேற்கொண்டார். உடல் ரீதியாகவும், லுக் ரீதியாகவும் வேறு மாதிரி இருக்கிறார் சிலம்பரசன். அதுமட்டுமல்லாமல் ராஜ்கமல் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தின் பட்ஜெட் ரூ.100 கோடி என்று சில தகவல் வெளி வந்துள்ளது.

அதேபோல் அதிகளவு கிராஃபிக்ஸ் பணிகள் இருபப்தால் படப்பிடிப்புக்கு முன்பாகவே ராஜ்கமல் நிறுவனம் சிஜி பணிகளை தொடங்கிவிட்டது. சென்னையில் உள்ள கமல்ஹாசனின் நிறுவனத்திலேயே பணியாளர்கள் மற்றும் தொழிற்நுட்ப உபகரணங்கள் கொண்டு வரப்பட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

https://twitter.com/SilambarasanTR_/status/1762115968883401191

இதனிடையே சிலம்பரசனின் பிறந்தநாளை முன்னிட்டு STR48 படத்தின் சில போஸ்டர்கள் வெளியிடப்பட்டன. இதில் சிம்பு இரு கதாபாத்திரங்களில் நடிப்பதும் தெரிய வந்தது. வரலாற்று ரீதியிலான படம் என்பதால், அதற்குரிய முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் எஸ்டிஆர்48 படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் STR48 லுக்கில் சிலம்பரசன் போர் வீரனாகவும், ராஜாவாகவும் இருக்கும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவின் தரம் பாகுபலிக்கு நிகராக இருக்கிறது. ஆனால் அந்த வீடியோவை ராஜ்கமல் நிறுவனமோ அல்லது தேசிங்கு பெரியசாமியோ தங்களின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடவில்லை. இதனால் ஏதேனும் விளம்பர படத்தின் வீடியோவா என்ற ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.