PAN இந்தியா வில்லனாக உருவெடுக்கும் விஜய் சேதுபதி!

சினிமாவில் தனக்கென எந்தவொரு தனித்துவத்தையும் வைத்துக்கொள்ளாமல் இருப்பதையே ஒரு தனித்துவமாக வைத்திருக்கும் நடிகர் விஜய் சேதுபதி. ‘மொதல்ல வில்லன் சார்.. அப்புறம் படிப்படியா ஹீரோ ஆனா போதும்..!” என்ற வசனத்தைக்கொண்ட நகைச்சுவை காட்சியை நாம்…

சினிமாவில் தனக்கென எந்தவொரு தனித்துவத்தையும் வைத்துக்கொள்ளாமல் இருப்பதையே ஒரு தனித்துவமாக வைத்திருக்கும் நடிகர் விஜய் சேதுபதி. ‘மொதல்ல வில்லன் சார்.. அப்புறம் படிப்படியா ஹீரோ ஆனா போதும்..!” என்ற வசனத்தைக்கொண்ட நகைச்சுவை காட்சியை நாம் பார்த்திருப்போம். ரஜினி, சத்தியராஜ் என பல ஆளுமைகள் இந்த பாணியில் சரித்திரம் படைத்தவர்கள் தான். ஆனால் ஹீரோவாக ஸ்கோர் செய்து படிப்படியாக வில்லனாக உருவெடுத்து இன்று இந்தியாவின் most wanted villian நடிகர் எனும் அந்தஸ்தை பெற்றிருக்கிறார் விஜய் சேதுபதி.

2012 மற்றும் 2013 ஆண்டு விஜய் சேதுபதியின் பொற்காலம். பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என அடுத்தடுத்த அவர் எடுத்த அவதாரங்களை அனைத்தும் தமிழக மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் மாபெரும் வெற்றி பெற்று அவரை புகழின் உச்சியில் அமர்த்தியது. ஒரு பேட்டியில் பேசும் போதும் விஜய் சேதுபதி, ‘சூதுகவ்வும் படத்துல நானே அந்த கேரக்டர கேட்டு வாங்குனேன். எனக்கு வழக்கமான ஹீரோவாவே எல்லா படத்துலையும் டான்ஸ் ஃபைட்டுனு மட்டும் போறதுல விருப்பம் இல்ல. எப்படியும் அந்த மாதிரி கதாப்பாத்திரங்கள்தான் அடுத்தடுத்து வரும். இந்த படத்துலயே நான் அதை உடைச்சிடுறேன்னு நலன் குமாரசாமிக்கிட்ட சொல்லிதான் அந்த கேரக்டரை வாங்குனேன்’ என்று கூறியிருப்பார்.

இந்நிலையில் பெரும்பாலான படங்களில் பரிசுத்த ஹீரோ போலல்லாமல் grey shaded character(முழுவதும் நல்லவராகவோ கெட்டவராகவோ இல்லாமல் இரண்டும் கலந்திருத்தல்)-களாகவே தேர்வு செய்து தனக்கென தனி முத்திரையை பதித்தார். விக்ரம் வேதாவில் தொட்டங்கி ந்சூப்பர் ஸ்டாரின் பேட்டையில் முழு வில்லனாக உருவெடுத்தவர் மாஸ்டரில் அதன் உச்சம் தொட்டார். விஜயின் jD கதாப்பாத்திரத்துக்கு இணையாக ஆடியன்ஸிடம் அப்ளாஸ் வாங்கியது விஜய் சேதுபதியின் பவானி கேரக்டர். இதனைத்தொடர்ந்து தெலுங்கு படமான உப்பெனாவிலும் வில்லனாக உருமாறி மிரட்டியெடுத்தார் விஜய் சேதுபதி. இவரின் கடைசி சம்பவமான விக்ரம் படத்தின் சந்தனம் கேரக்டரும் பெரிதும் பாராட்டப்பட்ட நிலையில் தற்போது பாலிவுட்டிலும் அடியெடுத்து வைப்பதாக தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.

இயக்குநராக அட்லி பாலிவுட்டில் அடியெடுத்து வைக்கும் படம் ஜவான். ஷாருக்கான், நயன்தாரா உள்ளிட்டோர் நடிக்க அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி. வில்லனாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து சமீபத்தில் விஜய் சேதுபதியை ஷாருக்கான் புகழ்ந்து பேசிய வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், ‘ என் வாழ்க்கையில் நான் பார்த்த மிக அற்புதமான நடிகர் விஜய் சேதுபதி’ என அவர் கூறியிருக்கிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் அல்லு அர்ஜூனின் புஷ்பா -2 படத்தில் விஜய்சேதிபதியை வில்லனாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருப்பதாக தகவல் வந்தது. இந்நிலையில் விஜய் சேதுபதி இந்தியாவின் most wanted PAN இந்தியா வில்லனாக உருவெடுத்துக்கொண்டிருக்கிறார் என்கிறனர் சினிமா வல்லுநர்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.