ஜவான் இசை வெளியீட்டு விழாவில் ஷாருக்கான் அனிருத்துக்கு முத்தம் கொடுத்தும் விஜய் சேதுபதிக்கு கட்டி அணைத்தும் சர்பிரைஸ் கொடுத்துள்ளார்.
இயக்குநர் அட்லி, ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் இயக்குநராக அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் ஷாருக்கான் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். நயன்தாரா, தீபிகா படுகோனே, விஜய் சேதுபதி, யோகி பாபு, பிரியாமணி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகிறது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். ஜவான் திரைப்படம் உலகம் முழுவதும் செப்டம்பர் 7-ம் தேதி வெளியாகிறது.
ஜவான் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெறும் என படக்குழு அறிவித்திருந்தது. இதனிடையே இன்று மாலை சென்னை தாம்பரத்தில் உள்ள தனியர் கல்லூரியில் நடைபெறும் இசை வெளியீட்டு விழாவுக்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஜவான் படத்தின் இசை வெளியீட்டு விழா மாலை தொடங்கியது. இந்த விழாவில் நடிகர் ஷாருக்கான், இசையமைப்பாளர் அனிருத், இயக்குநர் அட்லீ , விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி , யோகி பாபு ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
இசை வெளியீட்டு விழாவுக்காக மாஸ் எண்ட்ரி கொடுத்த நடிகர் ஷாருக்கானுக்கு பலத்த வரவேற்புடன் ரசிகர்கள் உற்சாகமூட்டினர். இதனைத் தொடர்ந்து நடிகர் ஷாருக்கான் விஜய் சேதுபதி கட்டி அணைத்தார், மேலும் இசையமைப்பாளர் அனிருத்துக்கு முத்தம் ஒன்றை கொடுத்து சர்ப்பிரைஸ் கொடுத்துள்ளார். இந்த படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.







