புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகையில் பணியாற்றிய 3 வடமாநில ஊழியர்களை பணிநிரந்தரம் செய்து கிரண்பேடி உத்தரவிட்டிருப்பது சர்ச்சையை எழுப்பியுள்ளது.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவியில் இருந்து கடந்த 16ஆம் தேதி கிரண்பேடி நீக்கப்பட்டார். இந்த நிலையில், பதவியில் இருந்து நீக்கப்படுவதற்கு முந்தைய நாள், துணைநிலை ஆளுநர் மாளிகையில் பணியாற்றிய 3 வடமாநில ஊழியர்களை மட்டும் பணிநிரந்தரம் செய்து கிரண்பேடி உத்தரவிட்டிருப்பது தெரியவந்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பல மாத ஊதிய நிலுவையிலும், பதவி உயர்வு இல்லாமலும் பணியாற்றிவரும் நிலையில், திடீரென வடமாநில ஊழியர்களை பணி நிரந்தரம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: