கிங்ஸ் கோப்பை கால்பந்து அரையிறுதி போட்டி; ஈரானிடம் இந்திய அணி தோல்வி…

கிங்ஸ் கோப்பை கால்பந்து அரையிறுதி போட்டியில் ஈரான் அணியிடம் 5க்கு4 கோல் கணக்கில், பெனால்டி சூட் முறையில் இந்திய அணி தோல்வியுற்றது. தாய்லாந்தின் சியாங் மாயில் நடைபெற்ற கிங்ஸ் கோப்பை கால்பந்து அரையிறுதிப் போட்டியில்…

கிங்ஸ் கோப்பை கால்பந்து அரையிறுதி போட்டியில் ஈரான் அணியிடம் 5க்கு4 கோல் கணக்கில், பெனால்டி சூட் முறையில் இந்திய அணி தோல்வியுற்றது.

தாய்லாந்தின் சியாங் மாயில் நடைபெற்ற கிங்ஸ் கோப்பை கால்பந்து அரையிறுதிப் போட்டியில் இந்திய அணியும், ஈரான் அணியும் மோதின. இரு அணிகளும் ஆரம்பம் முதலே சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தி, தலா 2 கோல்களை பதிவுசெய்தனர்.

90 நிமிடங்கள் முழுமையாக முடிந்த நிலையில், டிராவில் முடிவுற்றதையடுத்து பெனால்டி சூட் அவுட் முறை கொண்டு வரப்பட்டது. இதில் ஈரான் அணி 5க்கு 4 என்ற கோல் கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.