ஐபிஎல் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் பெங்களூரு அணி வீரர் விராத் கோலி படைத்துள்ளார்.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் 61 பந்துகளில் 101 ரன்கள் குவித்து விராத் கோலி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இது ஐபிஎல் போட்டிகளில் விராத் கோலி அடித்த 7ஆவது சதமாகும். இதன்மூலம் ஐபிஎல் போட்டிகளில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் விராத் கோலி முதலிடத்தை பிடித்தார். இவருக்கு அடுத்த இடத்தில் கிறிஸ் கெயில் உள்ளார். அந்த வகையில் 6 சதங்களுடன் கெயில் இரண்டாவது இடத்திலும், 5 சதங்களுடன் ஜோஸ் பட்லர் 3ஆம் இடத்திலும் உள்ளனர்.
ஐசிசி உலககோப்பை தலைசிறந்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் விராத் கோலி மொத்தம் 2 சதங்கள் விளாசியுள்ளார். முன்னதாக ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் விராத் கோலி 62 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.








