கமல்ஹாசன் – மணிரத்னம் – ARR கூட்டணியில் உருவாகும் #KH234 | டைட்டில் என்னவா இருக்கும்?

கமல்ஹாசனின் 234வது படத்தின் பெயர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.  கமல்ஹாசன் நடிப்பில் கடந்த ஆண்டு விக்ரம் திரைப்படம் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட்டடித்தது.  இந்த படத்தை லோகேஷ்…

கமல்ஹாசனின் 234வது படத்தின் பெயர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 

கமல்ஹாசன் நடிப்பில் கடந்த ஆண்டு விக்ரம் திரைப்படம் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட்டடித்தது.  இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார்,  இதில், கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பஹத் பாசில், காயத்ரி சங்கர் ஆகியோர் நடித்திருந்தனர்.

விக்ரம் திரைப்படத்தை கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரித்து அதிகளவு லாபத்தை ஈட்டியதால்,  பல திரைப்படங்களை தயாரிக்க முன் வந்துள்ளது.  சிம்புவின் 48வது படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளார்.  அதே போல, சிவகார்த்திகேயன், சாய்பல்லவி இணைந்து நடிக்கும் படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளார்.

இதையடுத்து, கல்ஹாசனின் 234வது படத்தை மணிரத்னம் இயக்க உள்ளார்.  இப்படத்தை, ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னலுடன் உயதநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயிண்ட் மூவீஸும்,  இயக்குநர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்க உள்ளன.  இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது.

இந்த படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்க உள்ளதாகவும்,  படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட்டு அடுத்த ஆண்டு படத்தை வெளியிட மணிரத்னம் திட்டமிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.  1987ம் ஆண்டு வெளியாக நாயகன் படத்திற்கு பின், கிட்டத்தட்ட 36 வருடங்களுக்கு பிறகு இருவரும் மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளதால், ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இந்தநிலையில் கல்ஹாசனின் 234வது படத்தின் பெயர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 37 ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் இணையவுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

https://twitter.com/RKFI/status/1721384575144956345

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.