பிரஷாந்த் நீல் இயக்கத்தில் ராக்கிங் ஸ்டார் யஷ் நடிக்கும் கே.ஜி.எஃப் திரைப்படம் கண்டங்களை கடந்து சக்கைபோடு போட்டு வசூலை வாரிக்குவித்து வருகிறது. தமிழ்நாடு திரையரங்குகள் வரலாற்றில் முதன் முறையாக வெளியான இரண்டாவது, மூன்றவது வாரத்தில் கூட அதிகாலை 2 மணிக்கு சிறப்பு காட்சிகள் திரையிடப்படும் அதிசய நிகழ்வுகளும் அரங்கேறிவருகிறது. உலகம் முழுக்க 10,000 திரையரங்களுக்கு மேல் இப்படத்தின் வசூல் 11வது நாளிலேயே(கடந்த 25ம் தேதி) 900 கோடிகளை கடந்துவிட்டது என சினிமா வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
KGF 2 – First 11 days collection:
AP/Telangana – 111 Cr. TN – 60.
Kerala – 50. Karnataka – 155.All India – 746.
USA – 51
Worldwide Total – 901.5 cr.#KGF2 #KGFChapter2#AndhraBoxOffice
— Blue Sattai Maran (@tamiltalkies) April 27, 2022
இந்திய சினிமாவில் நிதேஷ் திவாரி இயக்கத்தில், அமீர் கான் நடித்த தங்கல் திரைப்படம் கிட்டத்தட்ட ரூ.2000 கோடி வசூல் செய்து முதல் இடத்தில் உள்ளது. ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான பாகுபலி 2 திரைப்படம் ஏறத்தாழ 1,500 கோடி ரூபாய் வசூல் செய்து இரண்டாம் இடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண் நடிப்பில் வெளியான RRR திரைப்படம் வெளியான 33 நாட்களில் 1,100 கோடிகளை தாண்டிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவான எந்திரன் 2.0 திரைப்படம் ஏறத்தாழ 800 கோடி ரூபாய் வசூல் செய்திருந்ததாக கூறப்பட்ட நிலையில் வெளியான 11வது நாளிலேயே அதை பின்னுக்கு தள்ளி 900 கோடி ரூபாயை கடந்துள்ளது கே.ஜி.எஃப் -2 . இந்த வாரத்திற்குள் எப்படியும் 1,000 கோடியை கடந்துவிடும் எனவும், தொடர்ந்து திரையரங்குகளில் கூட்டம் நிரம்பி வருவதால் கூடிய விரைவில் ராஜமௌலியின் RRR மற்றும் பாகுபலி -2 ஆகிய படங்களை கே.ஜி.எஃப்-2 பின்னுக்கு தள்ளிவிடும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. பாகுபலியின் வசூலை கடந்தது ராக்கி பாயின் அடுத்த டார்கெட் ‘தங்கல்’ திரைப்படம் தான்!







