கேரள மாநிலம் மூணார் வனப்பகுதியில் பிறந்து சில நாட்களே ஆன குட்டியானை ஒன்று தாய் யானையுடன் தவழ்ந்து செல்லும் அழகிய காட்சி ஒன்று இணையத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கேரள மாநிலம் மூணார் வனப்பகுதியில் பல அரிய வனவிலங்குகள் உள்ளன. இந்நிலையில் சுற்றுலா வந்த சுற்றுலாப்பயணி ஒருவர் தாய் யானையுடன் குட்டியானை செல்லும் அழகிய காட்சி ஒன்றை வீடியோவாக பதிவு செய்து இணையத்தளங்களில் பதிவு செய்துள்ளார்.அது தற்போது இணையத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த காட்சியில் மூணார் அருகே மாட்டுப்பட்டி என்ற வனப்பகுதியில் தாய் யானையுடன் பிறந்து சில நாட்களே ஆன குட்டியானை ஒன்று தட்டுதடுமாறி அழகிய பிஞ்சு பாதங்களுடன் தவழ்ந்து செல்கிறது. வனப்பகுதியை விட்டு சில மணிநேரம் மட்டுமே வெளியே இரண்டு யானைகளும் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றன. காண்போரை பரவசமூட்டும் அழகிய காட்சிகள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
வேந்தன்








