கேரளாவில் தந்தை மகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கண்ணான கண்ணே பாடலை கிட்டாரில் வாசித்து அசத்திய கேரளா காவலரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதி கேரளா, கர்நாடகா எல்லை பகுதியாக உள்ளது.
குறிப்பாக கேரள மாநிலம் வயநாடு, மலப்புரம் மாவட்டம் மற்றும் கண்ணூர் மாவட்டம்
கூடலூர் எல்லை பகுதியாக உள்ளதால் அதிகளவில் தமிழ் மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கேரள மாநிலம் முழுவதும் கேரளா போலீசார் தந்தை, மகள் பாசம்
பற்றி பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்து வருகிறார்கள். இந்த நிலையில் கேரள
மாநிலம் கண்ணூர் மாவட்டம் தலைச்சேரி பகுதியில் உள்ள காவல் உதவி ஆய்வாளர்
ரூபேஷ் மறைந்த நா முத்துக்குமாரின் பாடலான கண்ணான கண்ணே பாடலை
கிட்டார் வைத்து மக்கள் வசிக்கும் பகுதிகளில் மக்களிடம் விழிப்புணர்வு
ஏற்படுத்தியது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதனை அடுத்து இந்த வீடியோ கேரளா போலீஸ் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வரும் சூழ்நிலையில் தற்பொழுது மக்களிடம் பெரும் வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது.







