நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் பாலிவுட் நடிகர் வருண் தவானும் ஆட்டோவில் செல்லும் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகரான வருண் தவான் தனது 18வது படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிப்பதாக தகவல் வெளியானது. நடிகை கீர்த்தி சுரேஷ், இந்த திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார் என்று தெரிகிறது.
இந்த படம் கடந்த 2016-ம் ஆண்டு தமிழில் வெளியான தளபதி விஜய்யின் பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘தெறி’ திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் என்று கூறப்படுகிறது. தமிழில் விஜய் மற்றும் சமந்தாவை வைத்து தெறி படத்தை இயக்குநர் அட்லீ. தற்போது, அதன் அதிகாரப்பூர்வ ரீமேக்கில் நடிகர் வருண் தவானை வைத்து காலீஸ் இயக்குகிறார். இந்த படத்தை அட்லீயே தயாரிப்பதாக கூறப்படுகிறது.
தற்காலிகமாக, “VD 18” என்று பெயரிடப்பட்ட இந்த படத்தின் புதிய செட்யூல் ஒன்று சமீபத்தில் மும்பையில் தொடங்கப்பட்டது. இப்படத்தின் படப்பிடிப்பிற்குப் பிறகு, வருண் தவானும் கீர்த்தி சுரேஷும் ஆட்டோ சவாரி செய்துள்ளனர். இதனை பார்த்த ரசிகர்கள் வீடியோ எடுத்துள்ளனர், இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதன்மூலம் நடிகை கீர்த்தி சுரேஷ் தான் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் என்ற தகவல் உறுதியாகியுள்ளது. விரைவில் இப்படத்தின் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழில் தெறி படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இதன் ஹிந்தி ரீமேக்கும் நல்ல் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.







