28.9 C
Chennai
September 26, 2023
முக்கியச் செய்திகள் செய்திகள் சினிமா

`Keep Calm and Plot Your Escape’ – இணையத்தை கலக்கும் ‘லியோ’ திரைப்படத்தின் கன்னட போஸ்டர்…!

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள லியோ திரைப்படத்தின் கன்னடம் மொழியின் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். சமீபத்தில், நடிகர்கள் சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் ஆகியோரின் பிறந்தநாள்களை முன்னிட்டு சிறப்பு கிளிம்ப்ஸ் விடியோக்களை படக்குழு வெளியிட்டிருந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இப்படத்தின் எடிட்டிங் பணிகளைத் தொடர்ந்து அடுத்ததாக விஎஃப்எக்ஸ் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. இதன்பின், டப்பிங் மேற்கொள்ளபட உள்ளது. அக்டோபர் 19ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளதால் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படத்தின் தரத்தை தீவிரமாக மெறுகேற்றி வருகிறார். இப்படத்தின் இரண்டாவது பாடலும் விரைவில் வெளியாக உள்ளது.நேற்று லியோ படத்தின் தெலுங்கு போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ”Keep calm and avoid the battle” என்ற வாசகங்களுடன் வெளியான போஸ்டர்கள் இணையத்தில் வைரலானது. இந்த போஸ்டரை படக்குழுவும், இயக்குநர் லோகேஷும் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பதிவிட்டர். அதன் தொடர்ச்சியாக இன்று மாலை 6 மணிக்கு படக்குழு ஒரு அறிவிப்பை வெளியிடப்போவதாக தனது எக்ஸ் பதிவில் பதிவிட்டது.

அதன்படி, தற்போது ஒரு போஸ்டரை படக்குழு தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் கன்னடம் மொழியின் போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். தற்போது இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவ்வப்போது வெளிவரும் இதுபோன்ற அப்டேட்டுகள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துகொண்டிருக்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

வெண்ணிலா கபடி குழு பட பாணியில் பரோட்டா சாப்பிடும் போட்டி

G SaravanaKumar

”ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தி என அமித்ஷா கூறவில்லை”

Janani

சூரியனை ஆய்வு செய்ய செப்.2-ம் தேதி ஏவப்படுகிறது ’ஆதித்யா’ – இஸ்ரோ அறிவிப்பு!!

Jeni