33.6 C
Chennai
May 29, 2024
முக்கியச் செய்திகள் சினிமா

கேஜிஎஃப், காந்தாரா வரிசையில் அடுத்த பான் இந்திய படத்தை களமிறக்கும் கன்னட திரையுலகம்

தென்னிந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான கேவிஎன் புரொடக்ஷன்ஸ், தங்களது அடுத்த படைப்பான கேடி தி டெவில் படத்தின் டைட்டில் டீசரை பெங்களூரில் பிரமாண்டமாக வெளியிட்டது.

2022 தென்னிந்தியாவின் வெற்றிகரமான வருடமாக மிளிர்கிறது. கேஜிஎஃப் 2 முதல் சார்லி 777 மற்றும் விக்ராந்த் ரோனா மேலும் மிக சமீபத்திய, காந்தாரா வரை, ஒன்றின் பின் ஒன்றாக பிளாக்பஸ்டர் ஹிட்படங்களை தந்துள்ளது கன்னட திரையுலகம். 2022 ஆம் ஆண்டில் மட்டும், கன்னடத்தில் 5 திரைப்படங்களின் கூட்டு வசூல், 1851 கோடிகளைத் தாண்டி அனைவரும் வியக்கும் வண்ணம், கன்னட திரையுலகம் இந்தியாவின் மிகப்பெரிய தொழில் துறையாக மாறி நிற்கிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பெங்களூரு ஓரியன் மாலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் மற்றும் கன்னட திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் கலந்து கொண்டனர். பாலிவுட் லெஜண்ட் திரு.சஞ்சய் தத், முன்னணி சாண்டல்வுட் ஸ்டார் ‘ஆக்சன் பிரின்ஸ்’ துருவா சர்ஜா, இயக்குனர் ‘ஷோமேன்’ பிரேம், தயாரிப்பாளர் கே.வி.என், ‘தலைவர் – பிசினஸ் அண்ட் ஆபரேஷன்ஸ்’ சுப்ரித், கன்னட திரைப்பட நடிகை ரக்ஷிதா, இசையமைப்பாளர் அர்ஜுன் ஜன்யா ஆகியோர் கலந்து கொண்ட இவ்விழாவில். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படத்தின் டைட்டில் டீசர் வெளியிடப்பட்டது.மேலும் இப்படத்தின் தமிழ் பதிப்பை உதயநிதி ஸ்டாலினின் ‘ரெட் ஜெயன்ட் மூவீஸ்’ வழங்கவுள்ளது. கன்னட பதிப்பை கேவிஎன் புரொடக்ஷன்ஸ் வழங்கவுள்ள நிலையில், இந்தி பதிப்பை திரு.அனில் ததானி தலைமையிலான ஏஏ பிலிம்ஸ் வழங்கவுள்ளது. தெலுங்குப் பதிப்பை தெலுங்குத் திரையுலகின் மிகப் பெரிய ஆளுமைகளில் ஒருவரான சாய் கொரபதி தலைமையிலான ‘வாராஹி சலன சித்திரம்’ வழங்கவுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading