காசிமேடு மீன்பிடி சந்தை களைகட்டிய மீன்கள் விற்பனை..!

காசிமேடு மீன்பிடி சந்தையில், இன்று வார இறுதி நாள் என்பதால் மீன்கள் விற்பனை களைகட்டியது. மீன்பிடி தடை காலம் ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் ஜூன் 14-ஆம் தேதி வரை கடைபிடிக்கப்படும் நிலையில், அனைத்து…

காசிமேடு மீன்பிடி சந்தையில், இன்று வார இறுதி நாள் என்பதால் மீன்கள் விற்பனை களைகட்டியது.

மீன்பிடி தடை காலம் ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் ஜூன் 14-ஆம் தேதி வரை கடைபிடிக்கப்படும் நிலையில், அனைத்து விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இருந்தும் மீன்வர்கள் பைபர் படகுகளின் மூலம் குறைந்த தூரம் சென்று மீன்களை பிடித்து வந்து விற்பனை செய்கின்றனர்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமையான இன்று காசிமேடு மீன் சந்தையில் பைபர் படகு மூலம் பிடித்து வரப்பட்ட சங்கரா, கானாங்கத்தை, இறால் போன்ற மீன்கள் மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட வளர்ப்பு மீன்களான கட்லா, ஜிலேபி, வெள்ளை இறால் போன்ற மீன்களும் விற்பனை செய்யப்பட்டன.

இதனால் காசிமேடு மீன் சந்தையில், மீன்களை வாங்க அசைவ பிரியர்கள் அதிக அளவில் குவிந்தனர். வஞ்சிரம் ஆயிரத்து 200 ரூபாய்க்கும், இறால் மற்றும் சிறிய வகை மீன்கள் 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டன.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.