முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை ஒட்டி திருவாரூர் அருகே காட்டூரில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தின் சிறப்பம்சங்களை தற்போது பார்க்கலாம்…
- மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி திருவாரூர் அருகே காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் ரூ.12 கோடி மதிப்பில் 7,000 சதுர அடி பரப்பளவில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது .
- தேர் போன்ற வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பொது வாழ்வை சித்தரிக்கும் அருங்காட்சியகம், முத்துவேலர் நூலகம், திருமண மண்டபம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
- திருவாரூர் ஆழித்தேரின் சிறப்பை குறிக்கும் வகையில் ஆழித் தேர் வடிவில் 7 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் ரூ.12 கோடி ரூபாய் மதிப்பில் இந்த கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது.

- முன்னாள் முதலமைச்சர் மறைந்த கருணாநிதியின் சிலை மற்றும் அவரது பொது வாழ்வை சித்தரிக்கும் அருங்காட்சியகம் கலைஞர் கோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
- இதில், கருணாநிதியின் இளமைக்கால புகைப்படங்கள், பெரியார் – அண்ணா மற்றும் திராவிட இயக்கத் தலைவர்களுடன் கருணாநிதி ஆற்றிய அரசியல் பணிகளை விளக்கும் படங்கள் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன.
- மேலும் கருணாநிதி பயன்படுத்திய பொருட்கள், அவரது இலக்கியப் பணிகள், கருணாநிதி எழுதிய புத்தகங்கள், கட்டுரைகள் போன்றவையும் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் முத்துவேலர் நூலகம் மற்றும் இரு திருமண மண்டபங்கள் ஆகியவையும் கலைஞர் கோட்டத்தில் கட்டப்பட்டுள்ளன.






