கன்னியாகுமரியில் திறப்புக்கு தயாரான கண்ணாடி பாலம்… நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் #MKStalin!

கன்னியகுமரியில் கண்ணாடி பாலம் அமைக்கும் பணி நிறைவடைந்தது. கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள 133 அடி உயரமுள்ள திருவள்ளுவரின் சிலை கடந்த 2000-ம் ஆண்டு நிறுவப்பட்டது. பல்வேறு புகழ்களை பாடும் இச்சிலை ஆனது அப்போதைய…

Kanyakumari | Installation of glass in the sea has started!

கன்னியகுமரியில் கண்ணாடி பாலம் அமைக்கும் பணி நிறைவடைந்தது.

கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள 133 அடி உயரமுள்ள திருவள்ளுவரின் சிலை கடந்த 2000-ம் ஆண்டு நிறுவப்பட்டது. பல்வேறு புகழ்களை பாடும் இச்சிலை ஆனது அப்போதைய முதலமைச்சரான கருணாநிதி திறந்து வைத்தார். இந்நிலையில் இச்சிலையின் 25வது ஆண்டு வெள்ளி விழா வரும் டிச. 30, 31, ஜன. 1 ஆகிய 3 தினங்களிலும் கன்னியாகுமரியில் கொண்டாடப்பட உள்ளன.

அதேபோன்று நடுக்கடலில் உள்ள சுவாமி விவேகானந்தரின் நினைவு மண்டபமும் மற்றும் 133 அடி உயரமுள்ள கொண்ட திருவள்ளுவரின் சிலையும் இணைக்கும் வகையில் கண்ணாடி கூண்டு பாலமும் அமைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், கண்ணாடி பாலம் அமைக்கும் பணி நிறைவடைந்து, திறப்புக்கு தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கண்ணாடி கூண்டு பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (டிச. 30) திறந்து வைக்கவுள்ளார்.

திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா கொண்டாட்டத்திற்காக கன்னியாகுமரி முழுவதும் களைகட்டியுள்ளது. கடல் நடுவே திருவள்ளுவரின் சிலை இரவு நேரத்தில் ஒளிரும் வகையில் லேசர் மின்விளக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. லேசர் ஒளி வெள்ளத்தில் திருவள்ளுவர் சிலை இரவில் வண்ணமயமாக ஜொலிக்கின்றன. கன்னியாகுமரி சுற்றுவட்டாரம் முழுவதும் மின்னொளிகளால் வெள்ளி விழாவை நினைவு கூறும் வகையில், வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.