#Kanguva – வெளியான புது அப்டேட்!

கங்குவா திரைப்படத்திற்கான ப்ரமோஷன் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், அத்திரைப்படம் குறித்து மற்றொரு அப்டேட் வெளியாகியுள்ளது. சூர்யாவின் கங்குவா படத்தின் இரண்டாவது டிரைலரை வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சூர்யா –…

கங்குவா திரைப்படத்திற்கான ப்ரமோஷன் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், அத்திரைப்படம் குறித்து மற்றொரு அப்டேட் வெளியாகியுள்ளது.

சூர்யாவின் கங்குவா படத்தின் இரண்டாவது டிரைலரை வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சூர்யா – சிவா கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் கங்குவா. இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றதால், இப்படத்தின் மேல் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நவம்பர் 14 ஆம் தேதி வெளியாகும் இப்படத்தின் புரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இப்படத்தை தமிழகத்தில் 800 திரைகளிலும் வட இந்தியாவில் 3500 திரைகளென ஒட்டுமொத்தமாக 6000 திரைகளில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாம். இந்த நிலையில், படத்தின் இரண்டாவது டிரைலர் தணிக்கை செய்யப்பட்டுள்ளதாகவும் 1 நிமிடம் 33 விநாடிகள் கொண்ட இந்த டிரைலரை விரைவில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.