காஞ்சிபுரம்: காயா ரோகினேஸ்வரர் ஆலயத்தில் பள்ளி அறை பூஜை -பக்தர்கள் தரிசனம்!…

காஞ்சிபுரம் குரு கோயில் என அழைக்கப்படும் காயா ரோகினேஸ்வரர் ஆலயத்தில் பள்ளி அறை பூஜை விமர்சையாக நடைபெற்றது. பள்ளியறை பூஜை விசேஷமானது என்றாலும் சிவன் கோவில்களில் நடக்கும் பள்ளியறை பூஜை கூடுதல் சிறப்பை தரக்கூடியதாகும்.…

காஞ்சிபுரம் குரு கோயில் என அழைக்கப்படும் காயா ரோகினேஸ்வரர் ஆலயத்தில் பள்ளி அறை பூஜை விமர்சையாக நடைபெற்றது.

பள்ளியறை பூஜை விசேஷமானது என்றாலும் சிவன் கோவில்களில் நடக்கும் பள்ளியறை
பூஜை கூடுதல் சிறப்பை தரக்கூடியதாகும். அதாவது சுவாமி, தனது சன்னதியில்
இருந்து புறப்பட்டு, அம்பாள் சன்னதியில் எழுந்தருளி, சிவ சக்தி ஐக்கியமாக
நடத்தப்படுவது தான் இந்த பள்ளியறை பூஜை.

சிவாலயங்களில் இரவு நேரத்தில் கோயில் நடை சாற்றப்படுவதற்கு முன் நடைபெறுகின்ற
பூஜை பள்ளியறை பூஜை ஆகும். அதாவது சுவாமியையும் அம்பாளையும் பள்ளியறையில்
ஊஞ்சலில் ஓரு சேர அமர வைத்து ஆராதனை செயவதே ஆகும்.

நேற்று வியாழக்கிழமை, பிரதோஷம் அதாவது குருவாரத்தை முன்னிட்டு காஞ்சிபுரம்
குரு கோயில் என அழைக்கப்படும் காயா ரோகினேஸ்வரர் கோயிலில் பள்ளியறை பூஜை
சிறப்பாக நடைபெற்றது.

பல்லக்கில் சிவனும் பார்வை அம்பாளும் எழுந்தருளி சிவ வாத்தியங்கள் முழங்க கோவிலை வளம் வந்து பள்ளியறைக்கு சாமி எடுத்துச் சென்று வைத்து தீபாரதனை காட்டப்பட்டு கதவுகள் அடைக்கப்பட்டன. பின்னர் பக்தர்களுக்கு பால் உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கப்பட்டன இந்த பள்ளியை பூச்சிகள் உத்திராட பக்தர்கள் வலம் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.