5 நாட்களில் கல்கி 2898 AD படம் செய்துள்ள வசூல்! எவ்வளவு தெரியுமா?

‘கல்கி 2898 AD’ திரைப்படம் வெளியாகி 5 நாட்களில் ரூ.650 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது நாக் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘கல்கி 2898 AD’. இந்த திரைப்படம்…

‘கல்கி 2898 AD’ திரைப்படம் வெளியாகி 5 நாட்களில் ரூ.650 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது

நாக் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘கல்கி 2898 AD’. இந்த திரைப்படம் கடந்த ஜூன் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன், அமிதாப் பச்சன் ஆகியோர் நடித்துள்ளதால், ரசிகர்கள் மத்தியில் இந்த திரைப்படம் குறித்து மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்தது.

மகாபாரதம், ஏஐ தொழில்நுட்பம், கல்கி அவதாரம் என புராணக் கதைகளுடன் எதிர்காலத்தை கற்பனை செய்து உருவான இந்த திரைப்படம் தொழில்நுட்ப ரீதியாக பாராட்டுகளைப் பெற்றுள்ளது. சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் இரண்டு பாகங்களாக இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார் நாக் அஸ்வின். அதேபோல், பான் இந்தியா படமாக தெலுங்கு, தமிழ் உட்பட பல மொழிகளிலும் ரிலீஸாகியுள்ளது கல்கி 2898 AD.

இதையும் படியுங்கள் : கல்வி விருது வழங்கும் விழா | சிறப்பு பிரிவில் விருது வென்ற மாணவிகள்!

இந்நிலையில், உலகளவில் ‘கல்கி 2898 AD’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி 5 நாட்களில் ரூ.650 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், தெலுங்கில் ரூ.600 கோடிக்கும் அதிகமாக வசூலித்த திரைப்படங்களான பாகுபலி, பாகுபலி – 2, ஆர்ஆர்ஆர், சலார் படங்களுடன் இப்படமும் இணைந்து அசத்தியுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.