அமெரிக்காவின் தற்காலிக அதிபராக பொறுப்பேற்ற கமலா ஹாரிஸ்

அமெரிக்க பொறுப்பு அதிபராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் ஒருமணி நேரம் பணியாற்றியுள்ளார். அமெரிக்கா அதிபராக ஜோ பைடன் பதவி வகிக்கிறார். துணை அதிபராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் பதவி…

அமெரிக்க பொறுப்பு அதிபராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் ஒருமணி நேரம் பணியாற்றியுள்ளார்.

அமெரிக்கா அதிபராக ஜோ பைடன் பதவி வகிக்கிறார். துணை அதிபராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் பதவி வகித்து வருகிறார். அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு நேற்று மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவருக்கு மயக்க மருந்து கொடுத்து சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து சிகிச்சையிலிருந்து குணமடையும் வரை தனது அதிபருக்கானள அதிகாரத்தை துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு தற்காலிகமாக வழங்கி பைடன் உத்தரவிட்டார்.

இதனால், அவர் சிகிச்சை பெற்று வந்த நேரத்தில், அதாவது, 10.10 முதல் 11.35 வரை அதிபரின் அனைத்து வகை பொறுப்புகளையும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் கவனித்து கொள்வார் என வெள்ளை மாளிகையால் அறிவிக்கப்பட்டது. இதனால் சுமார் ஒருமணி நேரம் 25 நிமிடங்கள் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், அமெரிக்க துணை அதிபருமான கமாலா ஹாரிஸ், அமெரிக்க அதிபர் பதவியில் இருந்துள்ளார். இதையடுத்து அமெரிக்க அதிபராக பதவி வகித்த முதல் பெண் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

இது போன்று தற்காலிக அதிபர் பொறுப்பு வழங்கும் நிகழ்ச்சி ஜார்ஜ் டபிள்யூ. புஷ் அதிபராக இருந்த போது நடந்ததாகவும் கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.