லியோ பாக்ஸ் ஆபிஸ் வசூலுக்கு ஆப்பு வைக்க கமல், ஷாருக்கானும் களமிறங்கியிருப்பதால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தை தொடர்ந்து தற்போது லியோ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகர் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் மூலம் நடிகர் விஜய்யுடன் லோகேஷ் 2-வது முறையாக கூட்டணி சேர்ந்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடந்து வருகிறது. படப்பிடிப்பு தளத்தில் இருந்து அவ்வப்போது வெளியாகும் புகைப்படங்களால் ரசிகர்கள் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் காத்துள்ளனர். மேலும் லியோ படத்தின் ப்ர்ஸ்ட் ப்ரொமோ வீடியோ ப்ளடி ஸ்வீட் என்று பெயர் அறிவிக்கப்பட்ட உடனேயே இந்தப் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்தது.
அதனை அதிகப்படுத்தும் விதமாக லியோ படத்தின் ப்ரோமோ வெளியாகி பட்டையை கிளப்பியது. ப்ரோமோவில் விஜய் ஒரு சாக்லேட் ஃபேக்டரி வைத்திருப்பது போலவும், அவரைத் தேடி மிகப்பெரிய கேங் ஒன்று வருவது போலவும் காட்சிகள் இருந்தன.
மேலும், லியோ ப்ரொமோ வீடியோ தற்போது 5 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். மேலும் படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், விஜய் இப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன், லியோ படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடக்கவுள்ளதாகவும், இந்த படப்பிடிப்பில் விஜயுடன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான் ஆகியோர் பங்கேற்பார்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் நடக்க இருக்கும் இறுதிகட்ட படபிடிப்பு இந்த ஆண்டு மே மாதத்துக்குள் லியோ படத்தின் மொத்த ஷூட்டிங் நிறைவு பெறவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் அக்டோபர் மாதம் வெளிவரும் லியோ படத்தை தொடர்ந்து அடுத்த இரு வாரங்களில் கமல் ஹாசனின் இந்தியன் 2 திரைப்படமும் அட்லீயின் ஜவான் திரைப்படமும் வெளிவருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் லியோ படத்தின் வசூல் குறைவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.