தேமுதிக தலைவர் விஜயகாந்த் குணமடைய வாழ்த்துகிறேன் என்று நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை கடந்த சில ஆண்டுகளாகத் தவிர்த்து வருகிறார். கட்சி தொடர்பான பணிகளிலும் அவர் பெரிதாக ஈடுபடுவதில்லை. குடும்பத்தினரே அதை கவனித்து வருகின்றனர். விஜயகாந்த் வழக்கமாக மேற்கொள்ளும் மருத்துவப் பரிசோதனைக்காக அவ்வப்போது மருத்துவமனை செல்வது வழக்கம். சமீபத்தில் பரிசோதனைக்காக விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
https://twitter.com/ikamalhaasan/status/1539458870312964096?t=_FjlJhuVwT5dmhROWx6yAg&s=08
இந்நிலையில், நீண்ட வருடங்களாக இருந்த நீரிழிவு பிரச்னையால் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி மூன்று விரல்கள் அகற்றப்பட்டுள்ளன. மருத்துவர்கள் கண்காணிப்பில் அவர் நலமுடன் இருக்கிறார். மேலும், மருத்துவர்களின் ஆலோசனைப்படி தொடர்ந்து சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் கேப்டன் விஜயகாந்த் வீடு திரும்புவார் என்று தேமுதிக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இனிய நண்பர் விஜயகாந்த் பூரண குணமடைந்து, முழு நலமுடன் வீடு திரும்ப விரும்புகிறேன். விரைந்து குணமடைய வாழ்த்துகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
-ம.பவித்ரா







