கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பில், 19 ஆண்டுகளுக்கு முன்னர் பயின்ற மாணவர்கள் கலந்து கொண்டனர். மேலும் பள்ளியின் வளர்ச்சிக்காக ரூ1 லட்சம் பங்களிப்பாக அளித்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள எலவனாசூர்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2002-2004 கல்வி ஆண்டில் பயின்ற மாணவர்கள் பலர் தற்போது உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் சுமார் 19 ஆண்டுகளுக்கு பின்னர் முன்னாள் மாணவர்கள் அனைவரும்
மீண்டும் சந்திக்க முடிவு செய்தனர். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. அதனைதொடர்ந்து பள்ளியில் நடந்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் பல ஆண்டுகளுக்கு பின்னர் தங்களின் பால்யகால நட்பில் மெய்மறந்து ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி அன்பை பரிமாறிக் கொண்டனர்.
பள்ளியில் பயின்ற போது தாங்கள் செய்த குறும்புகள் உள்ளிட்டவற்றை மீண்டும் அசைப்போட்டு சிலாகித்தனர். மேலும் தங்கள் பள்ளியின் வளர்ச்சிக்காக தங்களின் பங்களிப்பாக ஒரு லட்ச ரூபாயை வழங்கினர். இந்த சந்திப்பு அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.







