‘கல்கி 2898 ஏடி’ படத்தின் இரண்டாம் பாகம் – முக்கிய அப்டேட் கொடுத்த படக்குழு!

பிரபாஸ் நடித்துள்ள ‘கல்கி 2898 ஏடி’ படத்தின் இரண்டாம் பாகம் குறித்தான முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. நாக் அஸ்வின் இயக்கியுள்ள கல்கி 2898 AD திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. பிரபாஸ் ஹீரோவாக…

பிரபாஸ் நடித்துள்ள ‘கல்கி 2898 ஏடி’ படத்தின் இரண்டாம் பாகம் குறித்தான முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

நாக் அஸ்வின் இயக்கியுள்ள கல்கி 2898 AD திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில், கமல்ஹாசன் வில்லனாகவும், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி ஆகியோர் லீடிங் கேரக்டரிலும் நடித்துள்ளனர்.

சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் இரண்டு பாகங்களாக இப்படத்தை இயக்கியுள்ளார் நாக் அஸ்வின். அதேபோல், பான் இந்தியா படமாக தெலுங்கு, தமிழ் உட்பட பல மொழிகளிலும் ரிலீஸாகியுள்ளது கல்கி 2898 AD. இப்படத்திற்கு ஆரம்பம் முதலே அதிக எதிர்பார்ப்பு இருந்ததால், டிக்கெட் அட்வான்ஸ் புக்கிங்கில் அடித்து நொறுக்கியது.

அதன்படி, கல்கி படத்திற்கு முதல் நாள் அட்வான்ஸ் புக்கிங் மூலம் கிடைத்த வசூல் மட்டும் 55 கோடி ரூபாய் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் முதல் நாளில் கண்டிப்பாக 100 கோடி வரை கலெக்ஷன் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கல்கி 2898 AD வசூலில் சக்கைப் போடு போட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய 3 மொழிகளிலும் கல்கி 2898 AD படத்திற்கு ரசிகர்களிடம் வரவேற்பு உள்ளது. முக்கியமாக ஐமேக்ஸ் ஸ்க்ரீனில் ஒரு டிக்கெட் விலை 1300 ரூபாய்க்கும் அதிகமாக விற்கப்படுகிறது. அப்படியிருந்தும் ரசிகர்கள் கல்கி படம் பார்க்க அதிக ஆர்வம் காட்டினர். முதல் நாளே இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனம் கிடைத்த நிலையில், பாக்ஸ் ஆபிசியிலும் ரூ.191.5 கோடி வசூலை வாரி குவித்தது.

இதன் மூலம், பாகுபலி, ஜவான் போன்ற பல படங்களின் முதல் நாள் வசூல் முறியடிக்கப்பட்டது. இப்படம் நேற்றைய தினம் ரூ.298.5 கோடி வசூல் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் இன்றும் நாளையும் விடுமுறை நாள் என்பதால்… 5 நாட்களில் 600 கோடி வசூலை வாரி குறிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பிரபலங்கள் பலரும் கல்கி படத்தை பார்த்து விட்டு, இந்திய சினிமாவில் அடுத்த மையில் கல் என இந்த படத்தை பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படம் இந்திய சினிமாவை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து சென்று விட்டதாகவும் இரண்டாம் பாகத்திற்கு ஆர்வமுடன் காத்திருப்பதாகவும் நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது எக்ஸ் பக்கத்தில் பாராட்டியிருந்தார். இந்நிலையில் படத்தின் இரண்டாம் பாகம் வரும் என்பதை உறுதி செய்துள்ள படக்குழு இதுகுறித்தான அப்டேட்டும் கொடுத்துள்ளது.

அதாவது, “கல்கி 2898 ஏடி’ படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு 60% முடிந்துவிட்டது. முக்கியமான காட்சிகள் இன்னும் படமாக்கப்பட உள்ளது. இரண்டாம் பாகத்தின் ரிலீஸ் பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. படப்பிடிப்பு முடித்த பின்னரே அந்த அப்டேட் கொடுப்போம்” எனக் கூறப்பட்டுள்ளது. இந்த செய்தி பிரபாஸ் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.