‘கலங்காதே’ – ‘மகுடம்’ படத்தின் 3வது பாடல் வெளியீடு…!

விஷால் இயக்கி நடிக்கும் ‘மகுடம்’ படத்தின் 3வது பாடலான ‘கலங்காதே’ வெளியாகியுள்ளது.

நடிகர் விஷால் இயக்கி நடித்துள்ள புதிய திரைப்படம் ‘மகுடம்’. இந்த படத்தில் துஷாரா விஜயன் மற்றும் அஞ்சலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இப்படம் சூப்பர் குட் பிலிம்ஸின் 99-வது படமாகும்.

முன்னதாக இப்படம் இயக்குநர் ரவி அரசு இயக்கத்தில் தொடங்கப்பட்டது. ஆனால் கருத்து வேறுபாடுகளால் அவர் படத்திலிருந்து விலக படத்தின் இயக்கப் பொறுப்பை நடிகர் விஷால் ஏற்றுக்கொண்டார்.

இந்த நிலையில் ‘மகுடம்’ படத்தின் 3வது பாடலான ‘கலங்காதே’ வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.