BTS இசைக்குழுவில் உள்ள பிரபல பாடகர் ஜங்குக்-ன் ‘Seven’ என்னும் பாடல் ஜூலை 14ம் தேதி வெளியாக உள்ளது.
உலகளவில் பிரபலமான இசைக்குழுக்களில் தென்கொரியாவைச் சேர்ந்த BTS-ம் ஒன்று. ஜின், சுகா, ஆர்.எம், ஜே-ஹோப், ஜிமின், வி, ஜங்கூக் ஆகிய 7 இளைஞர்களை உறுப்பினர்களாகக் கொண்ட இந்த இசைக்குழு, தனது வசீகர குரலாலும், நடனத்தாலும், உற்சாகமூட்டும் பாடல் வரிகளாலும், பலரது மனங்களையும் கவர்ந்துள்ளது.
கடந்த 2013 ஆம் ஆண்டு அறிமுகமான BTS, ஏராளமான இசை ஆல்பங்களையும், பாடல்களையும் வாரி வழங்கியுள்ளது. பல்வேறு கின்னஸ் சாதனைகளையும், நூற்றுக்கணக்கான விருதுகளையும் அள்ளிக் குவித்துள்ள இந்த இசைக்குழு, கடந்த ஆண்டு ’ப்ரூஃப்’ எனும் ஆல்பத்தை வெளியிட்டது.
பொதுவாக BTS உறுப்பினர்கள் ஒன்றாகவே ஆல்பங்களை வெளியிட்டு வந்தனர். ஆனால் பி.டி.எஸ் உறுப்பினர்கள் சமீப காலங்களில் தங்கள் தனி ஆல்பங்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், BTS இசைக்குழுவில் உள்ள பிரபல பாடகர் ஜங்குக்-ன் ‘Seven’ என்னும் பாடல் ஜூலை 14ம் தேதி வெளியாக உள்ளது.







